AK 63 
வெள்ளித்திரை

AK 63: நடிகர் அஜித்தின் 63 வது திரைபடத்திற்கான அப்டேட்; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

கண்மணி தங்கராஜ்

தற்போதைய சமூகவளைதள ட்ரெண்டிங்கே ‘AK63’ தான். நடிகர் அஜித்தின் ரசிகர்கள் பொதுவாகவே அவரின் திரைப்பட அப்டேட்டுக்காக ஏங்குவது வழக்கம். அஜித்தின் ‘விடா முயற்சி’ படத்திற்கான படப்பிடிப்பு வேலைபாடுகள் தீவிரமாக நடந்து வருகின்ற சமயத்தில் ‘AK63’ திரைபடத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

ரசிகர்கள் கொண்டாடும் 'AK63':

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்தினின் இயக்கத்தில் அஜித் நடிக்கும் இப்படத்திற்கு ‘GOOD BAD UGLY’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. பெருமளவிலான பொருட்செலவு பட்ஜெட் படங்களை தயாரிக்கும் பிரபல ‘மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ்’ நிறுவனம் தான் இப்படத்தை தயாரிக்கிறது. அத்துடன் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

படத்தின் தலைப்பே மாஸாக இருக்கு என்று அஜித்தின் ரசிகர்கள் இணையத்தில் கமெண்ட் செய்து அவரைக் கொண்டாடி வருகின்றனர். நீண்ட காலமாகவே அஜித்தின் படம் குறித்த  அப்டேட்டிற்காக  காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பானது அளவில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.  மேலும், இப்படம் 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

AK 63

திரைப்படத்தின் போஸ்டர்:

நடிகர் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் போஸ்டர் மூலமாகவே திரைப்படம் குறித்த பல தகவல்கள் வெளியாகியுள்ளன. போஸ்டர் முழுக்க துப்பாக்கிகளும் இரும்பு கம்பிகளும், ரத்தம் தெறிக்கும் குறியீடுகளும் இருப்பதால் இந்த படம் நிச்சயமாக அதிரவைக்கும் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாகத்தான் இருக்கும் என்பதை அறிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி அஜித் இதுவரை நடித்த திரைப்படங்களின் தலைப்பானது பெரும்பாலும் சுத்த தமிழில் தான் இடம்பெற்றிருக்கும். ஆனால் இந்த முறை முதன் முதலாக ஆங்கிலத்தில் படத்தின் தலைப்பு இடம்பெற்றிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

யார் இந்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்:

நடிகர் அஜித்தின் தீவிர ரசிகரான இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தமிழ் சினிமாவில் 'திரிஷா இல்லன்னா நயன்தாரா' படத்தின் மூலமாக இயக்குநராக  அறிமுகமானார். அதற்கு அடுத்தபடியாக நடிகர் சிம்பு நடிப்பில் 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படத்தினை இயக்கினார். ஆனால் இப்படமானது ரசிகர்ளின் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று   மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து அண்மையில் விஷால், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் ‘மார்க் ஆண்டனி’ படத்தை இயக்கினார். இப்படம் வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி ரசிகர்களின் ஆரவார வரவேற்பை பெற்றது. மேலும் இது   பெரியளவிலான வெற்றியையும், அடுத்தடுத்த படவாய்ப்புகளையும் ஏற்படுத்தி தந்தது.

அதன்பிறகு தற்போது நடிகர் அஜித்தை வைத்து இயக்கவுள்ளார்.  ஆதிக் 'நேர்கொண்ட பார்வை' படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்த ஆதிக், நடிகர் அஜித்துடனான அறிமுகத்தைப் பெற்றார். தன்  தீவிர ரசிகராக இருப்பவரின் இயக்கத்தில் அஜித் நடிக்க போவது ரசிகர்களின்  எதிர்பார்ப்பினை அதிகப்படுத்தியுள்ளது.

இரை தந்த இறைவனுக்கு இரையாலேயே அபிஷேகம்!

கடலை மாவை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க! 

ஐப்பசி அன்னாபிஷேகம் தோன்றிய வரலாறு!

உன்னால் முடியும் பெண்ணே! இந்த 5 அடிப்படை விஷயங்கள் இருந்தால் போதுமே!

Dear Girls… உங்கள் தொப்பையை மறைக்க இப்படி ட்ரெஸ் பண்ணுங்களேன்!

SCROLL FOR NEXT