Actor Karthi Japan movie 
வெள்ளித்திரை

நடிகர் கார்த்தியின் 25வது படத்தை முன்னிட்டி தினமும் ஆயிரம் பேருக்கு அன்னதானம்!

ராகவ்குமார்

இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் 25 ஆவது படமாக வெளிவர உள்ளது 'ஜப்பான்' திரைப்படம். இப்படத்தை கொண்டாடும் வகையில் நடிகர் கார்த்தியின் மக்கள் நல மன்றம் சார்பில் தினமும் ஆயிரம் பேருக்கும் அன்னதானம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த தினசரி அன்னதானத் திட்டத்தை 'ஜப்பான்' படத்தின் தயாரிப்பாளரான எஸ் ஆர் பிரபுவும், அப்படத்தின் இயக்குநரான ராஜுமுருகனும் இணைந்து தொடங்கி வைத்தனர். 

நடிகர் கார்த்தி நடிப்பில் 25 வது திரைப்படம் வெளியாகயுள்ளது 'ஜப்பான்'. இதனை முன்னிட்டு 25 ஆயிரம் பேருக்கு உணவு வழங்க வேண்டும் என நடிகர் கார்த்தி விருப்பம் தெரிவித்துள்ளார். அவருடைய விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் கார்த்தி மக்கள் நல மன்றம் மற்றும் உழவன் அறக்கட்டளை சார்பில் ஒரே நாளில் 25 ஆயிரம் பேருக்கு உணவு வழங்குவதை விட, அக்டோபர் 17ஆம் தேதியான தொடங்கி, 'ஜப்பான்' திரைப்படம் வெளியாகும் நவம்பர் 10ஆம் தேதி வரை இந்த உணவு வழங்குவது தொடரும் என்று கார்த்தி ரசிகர் மன்றத்தினர் தெரிவித்திருக்கிறார்கள்.

இதனால் சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு நாள்தோறும் ஆயிரம் மக்களுக்கான சுவையான உணவு வழங்கப்படுகிறது. பொதுவாக படத்தின் ப்ரோமோஷனுக்காக பல சினிமா நிறுவனங்கள் பல கோடிகளை செலவழிக்கிறது. இதை போல அன்ன தானத்திற்க்கும் சிறிது செலவழித்தால் மக்கள் வாழ்த்துவார்கள்.

புரதச்சத்து மிகுந்த ஜோரான ரெசிபிக்கள் செய்து அசத்தலாமா?

ஒரு மனிதன் எப்போது மனிதனாகிறான் தெரியுமா?

தென்னிந்தியாவின் தாஜ்மகாலைப் பற்றித் தெரியுமா?

மூச்சிரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

SCROLL FOR NEXT