மெட்ராஸில் வளர்ந்த எனக்கு ஜாதி தெரியாது என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ஜப்பான் திரைப்படம் வரும் நவம்பர் 10 ம் தேதி திரைக்கு வர உள்ளது.இதனையெட்டி இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய நடிகர் கார்த்தி, "நான் நடித்த மெட்ராஸ் படத்தை ஜாதி படமா என்று கேட்கிறார்கள். மெட்ராஸ் படம் ஒரு சுவரை சுற்றி நடக்கும் கதை. ஒரு சுவருக்கு பின் இருக்கும் அரசியலை வைத்து அழகான கதையை உருவாக்கி இருப்பார் இயக்குநர் பா.ரஞ்சித். ஒரு சர்வதேச படத்தைபோல் எடுத்திருப்பார் இயக்குநர்.
சென்னையில் வளர்ந்த எனக்கு ஜாதி தெரியாது. அதேபோல்தான் மெட்ராஸில் வளர்ந்த பசங்களுக்கு ஜாதி தெரியாது. மேலும், நான் ஜாதி பார்ப்பதில்லை. பள்ளியில் ஏன் அனைவருக்கும் ஒரே மாதிரியான சீருடை தருகிறார்கள்? ஏன்னெற்ால் ஒருவருக்கெருவர் எந்த வித்தியாசமும் பார்க்ககூடாது என்பதற்காகதான். நான் அப்படிப்பட்ட சூழ்நிலையில் வளர்ந்தவன். நான் ஜாதி பார்ப்பது கிடையாது.
நான் நடித்த மெட்ராஸ் படத்தை யாராவது சாதிய படம் என்றால் அது அவர்களுடைய கண்ணோட்டத்தை பொருத்தது. என்னைப்பொருத்தவரையில் இயக்குநர் பா.ரஞ்சித் என்னை வைத்து எடுத்த மெட்ராஸ் படம் ஒரு இன்டர்நேஷ்னல் படங்களுக்கு இணையான படமாகும்” என்றார்.
ஜாதி குறித்த நடிகர் கார்த்தியின் பேச்சு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.