Editor 1
வெள்ளித்திரை

11 வருடங்களுக்குப் பிறகு அப்பாவான 'RRR' பட ஹீரோ! என்ன குழந்தை தெரியுமா?

கல்கி டெஸ்க்

மிழ்நாட்டில் மட்டுமல்லாது உலகளவிலும் வசூலில் பெரும் சாதனைப்படைத்தது  ஆர்ஆர்ஆர் திரைப்படம். இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு ஹீரோவாக அறிமுகமான ராம் சரண் கடந்த 11 வருடங்களுக்கு பிறகு தந்தையாகியுள்ளார்.

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவியின் மகன் தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வந்துகொண்டிருப்பவர் நடிகர் ராம் சரண். இவர் அப்பல்லோ மருத்துவமனையின் நிறுவனரான பிரதாப் சி ரெட்டியின் பேத்தியும், அப்பல்லோ மருத்துவமனையின் துணைத் தலைவரான உபசனா காமினேனியை  கடந்த 2012ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுடைய பிரம்மாண்டமான திருமணம் இந்திய அளவில் பேசப்பட்டது. நாட்டின் முக்கிய தலைவர்கள், நடிகர்கள்  மற்றும் ரசிகர்கள் என ஆயிரக்கணக்கானோர் திருமண நிகழ்வில் கலந்துகொண்டனர். ராம் சரண் மற்றும் உபசனா காமினேனி ஆகியோர் தங்களுடைய திறமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தங்களுடைய துறையில் பல சாதனைகளைப் படைத்துவந்தனர். இதனால் கடந்த 11 ஆண்டுகளாக குழந்தைப்பேற்றைத் தள்ளிப்போட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராம் சரண் மற்றும் உபசனா காமினேனி தம்பதியினரின் வளைகாப்பு படம் இணையத்தில் வெளியாக வைரலானது. இதனையடுத்து ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்றைத் தினம் அனுமதிக்கப்பட்ட உபசனா காமினேனிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “ராம் சரண் மற்றும் உபசனா காமினேனி தம்பதியினருக்கு  ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இன்று அதிகாலை பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும் தாய் சேய் இருவரும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தன்னுடைய பேத்தியை “Welcome Mega Princess” என ட்விட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அதேபோல், தெலுங்கு திரையுலகினர் மட்டுமல்லாது இந்தியப் பிரபலங்கள் பலரும் ராம் சரண் மற்றும் உபசனா காமினேனி தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துவருகிறார்கள்.

புரதச்சத்து மிகுந்த ஜோரான ரெசிபிக்கள் செய்து அசத்தலாமா?

ஒரு மனிதன் எப்போது மனிதனாகிறான் தெரியுமா?

தென்னிந்தியாவின் தாஜ்மகாலைப் பற்றித் தெரியுமா?

மூச்சிரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

SCROLL FOR NEXT