80ஸ் பில்டப் 
வெள்ளித்திரை

ஓடிடியில் ரிலீஸானது சந்தானத்தின் 80ஸ் பில்டப்!

விஜி

குலேபகாவலி, ஜாக்பாட் போன்ற காமெடியை மையப்படுத்திய படங்களை கொடுத்த இயக்குநர் கல்யாண், சந்தானத்துடன் இணைந்துள்ள படம் 80ஸ் பில்டப்.

ஹீரோவான பின்னரும் நகைச்சுவை கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் சந்தானம். அவர் நடிப்பில் இந்த ஆண்டு 3 படங்கள் ரிலீஸ் ஆகி உள்ளன. அதில் கடந்த ஜுலை மாதம் திரைக்கு வந்த டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் சந்தானத்துக்கு கம்பேக் படமாக அமைந்தது. அப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் நன்கு வசூலை வாரிக்குவித்தது.

டிடி ரிட்டன்ஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் நடிப்பில் கிக் என்கிற திரைப்படம் ரிலீஸ் ஆனது. அப்படம் பெரியளவுக்கு வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து மூன்றாவதாக அவர் நடித்த 80ஸ் பில்டப் திரைப்படம் திரைக்கு வந்தது. இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக சன் டிவி சீரியல் நடிகை ராதிகா ப்ரீத்தி நடித்திருந்தார்.

ரஜினி, கமல் ரசிகர்களுக்கு இடையேயான மோதலை நகைச்சுவை கலந்து சொல்லி இருந்தது. இப்படம் கடந்த மாதம் 24-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆன நிலையில், எந்த ஒரு அறிவுப்புமின்றி சத்தமில்லாமல் தற்போது ஓடிடியில் ரிலீஸ் ஆகியுள்ளது. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தான் 80ஸ் பில்டப் திரைப்படம் ரிலீஸ் ஆகி உள்ளது.

முகத்துக்கு நீராவி பிடிங்க… கரும்புள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்! 

பார்ப்பதற்கும் கவனிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்திய துரோணாச்சாரியார்!

வயதாகும் வேகத்தைக் குறைக்க விபரீத முடிவெடுத்த தொழிலதிபர்!

நடிகர் முரளி அம்மாவுக்கு இப்படி ஒரு மரணமா? கனவில் கூட யாருக்கும் இப்படி நடக்கக்கூடாதப்பா!

மழைக்காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள அருந்த வேண்டிய 4 பானங்கள்!

SCROLL FOR NEXT