Actor Soori 
வெள்ளித்திரை

ரெட்டை கதிரே... நடிகர் சூரி ட்வின்ஸா? அச்சு அசல் அவரை போலவே இருக்கும் சகோதரர்!

விஜி

நடிகர் சூரியின் இரட்டை சகோதரரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மதுரையை பூர்விகமாகக் கொண்ட சூரி, சினிமா பின்புலம் ஏதுமின்றி 1996ஆம் ஆண்டு நடிகன் ஆகவேண்டும் என்ற பெரும் கனவுடன் சென்னை பயணித்து, சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து, பெரும் போராட்டங்களுக்குப் பிறகு 2009ஆம் ஆண்டு வெண்ணிலா கபடிக் குழு படம் மூலம் அங்கீகாரம் பெற்றார். பரோட்டா சூரியாக அறிமுகமான இவர், தற்போது படிப்படியாக முன்னேறி ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார்.

காமெடியனாக பல படங்களில் ஹீரோக்களுடன் இணைந்து சூரி கலக்க, அவரது காமெடி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத அங்கமாக ஒரு கட்டத்தில் மாறியது. எனினும் அவற்றையெல்லாம் ஓரம்கட்டி, இயக்குநர் வெற்றிமாறன் தனக்கு அளித்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி, விடுதலை படம் மூலம் இன்று ஹீரோவாக ரசிகர்களின் மனங்களை வென்று அட சொல்ல வைத்துள்ளார்.

காமெடி தாண்டி தற்போது விடுதலை 2, கொட்டுக்காளி, கருடன் என கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்வு செய்து நல்ல கதாபாத்திரங்களில் கலக்கி வரும் சூரியின் அடுத்தக்கட்ட திரைப்பயணத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

தன் பிஸியான திரைப்பயணம் தாண்டி, மதுரையில் தன் கூட்டுக்குடும்பத்தினர் அனைவரையும் அரவணைத்து முழு கவனம் செலுத்தி வரும் சூரியின் தனிப்பட்ட பக்கங்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இன்ஸ்டாவில் தன் குடும்ப வீடியோக்கள், புகைப்படங்களைப் பகிர்ந்து மகிழும் சூரி, மதுரையின் பல இடங்களில் அம்மன் ரெஸ்டாரண்ட் என்ற பெயரில் சைவ உணவகங்களும், அய்யன் ரெஸ்டாரண்ட் என அசைவ உணவகங்களையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். மேலும் அம்மன் கேண்டீன் என்ற பெயரில் எளியவர்களும் சாப்பிட்டு மகிழும் வகையில் குறைவான விலையில் தரமான உணவுகளை விற்பனை செய்து வருகின்றனர். இந்தக் கடைகளை அவரது தம்பி தான் மேற்பார்வையிட்டு வருகிறார்.

சூரிக்கு ஒரு அண்ணன் இருக்கும் நிலையில், அவருடன் இணைந்து பிறந்த இரட்டை சகோதரர் ஒருவரும் உள்ளார். இவரின் நிஜ பெயர் ராமர் ஆகும். இவரின் இரட்டை சகோ பெயர் லட்சுமணன் ஆகும். இவரின் புகைப்படம் தான் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

soori brother

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT