வெள்ளித்திரை

சூர்யா 43 யின் புதிய அப்டேட்: மீண்டும் இணையும் சூரரைப் போற்றும் கூட்டணி!

பாரதி

நடிகர் சூர்யா தனது அடுத்த படத்தில் சுதா கொங்கராவுடன் இணைய இருப்பதாக ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று சூர்யா தனது X தளத்தில் “42 hrs to go” என்ற புதிய அப்டேட்கான ஹின்ட்டை வெளியிட்டார். இந்த அப்டேட் சூர்யாவின் ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் ட்ரெண்டு செய்துள்ளனர்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து ஒடிடி யில் வெளியான சூரரைப்போற்று மாஸ் ஹிட் கொடுத்தது. அதுமட்டுமல்லாமல் சூர்யா தன்னுடைய முதல் தேசிய விருதையும் பெற்றார். அதேபோல், சிறந்த நடிகை, இசை மற்றும் இயக்குநர் என பல்வேறு பிரிவுகளில் சூரரைப்போற்றும் படம் 2020ம் ஆண்டிக்கான விருதினை அள்ளிசென்றது.

இந்த படத்தில் நடித்த அபர்ணா முரளிதரன், சூர்யா மற்றும் படத்திற்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ் ,இயக்குனர் சுதா கொங்கரா ஆகியோருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இந்த கூட்டனி எப்போது மீண்டும் இணையும் என்று ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்டது.

சூர்யா அடுத்த படத்தில் சுதா கொங்கராவுடன் பணியாற்றவுள்ளதாக கூறிய பின்னர் ஜி.வி.பிரகாஷ் ஜுலை 23ம் தேதி சூர்யா பிறந்த நாளன்று “ GV 100, Let’s go” என்று பதிவிட்டு ரசிகர்களின் ஆர்வத்தை இன்னும் அதிகமாக தூண்டிவிட்டார். இதன்மூலம் பெயரிடப்படாத சூர்யாவின் 43 படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பார் என சினிமா ரசிகர்கள் கருதுகிறார்கள்.

மேலும் சூர்யாவின் 43வது படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா நசிம், பாலிவுட் நடிகர் விஜய் வர்மா ஆகியோர் இணைவதாக செய்திகள் வெளியானது. சுதா கொங்கரா இயக்கும் இந்த படம் பெரிய பட்ஜெட்டில் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனம் 2D Entertainment தயாரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நாளை 4 மணியளவில் வெளியாக உள்ள இந்த படத்தின் அப்டேட்டில் அதிகாரப்பூர்வமாக நடிகர்கள் மற்றும் டெக்னிஸியன்ஸ் பற்றிய விவரங்களை வெளியிடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சூர்யா ஏற்கனவே சிறுத்தை சிவா இயக்கும் “கங்குவா” படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி 10 மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். சூர்யாவின் அடுத்த படம் வெற்றி மாறனின் வாடிவாசலில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் வெற்றி மாறன் விடுதலை பாகம் 2 படம் எடுப்பதில் ஆர்வம் காட்டி வருவதால் வாடிவாசல் படத்தின் ஷூட் தள்ளிவைக்கப்பட்டது. வாடிவாசல் படத்தின் வேலைகள் ஆரம்பிக்கும் முன்னர் சூர்யா 43 படத்தின் படப்பிடிப்பை முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சூர்யா சுதா கூட்டணியில் சூரரைப்போற்று ஒடிடி தளத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றது. அவர்கள் கூட்டணியில் உருவாகும் அடுத்த படத்தை திரையரங்கில் வெளியிட கூறி நடிகர் சூர்யா கூறியதாக தகவல் வெளியானது. இது சூர்யா ரசிகர்களுக்கு அடுத்தடுத்த ட்ரீட்டாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

செல்வ செழிப்பு தரும் சில எளிய வாஸ்து குறிப்புகள்!

நேரம் எனும் நில்லாப் பயணி!

ஸ்வஸ்திக் வடிவ கிணறு பற்றி தெரியுமா உங்களுக்கு?

சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!

World Family Doctor Day: கொண்டாடப்பட வேண்டிய ஹீரோக்கள்! 

SCROLL FOR NEXT