vijay sethupathi's maharaja movie poster 
வெள்ளித்திரை

விஜய்சேதுபதியின் 50வது படம்:மிரளவைக்கும் மகாராஜா போஸ்டர்!

ராகவ்குமார்

டிகர் விஜய்சேதுபதியின் 50வது திரைப்படமான மகாராஜா படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் போஸ்டர் வெளியிட்டு விழாவில் கலந்துக்கொண்டு பேசிய விஜய்சேதுபதி,”என்னை திட்டியும் வாழ்த்தியும் இந்த உயரத்திற்கு கொண்டு வந்த ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பொறுமையும் அனுபவமும் ஒரு மனிதனை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும். அத்தகைய அற்புதமான அனுபவத்தை கொடுத்த என் இயக்குநர்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி.

இந்த படம் உங்களுக்கு பிடித்தது போல வந்திருக்கிறது. ஐம்பதாவது படம் என்பது நிச்சயம் என் சினிமா பயணத்தில் ஒரு மைல்கல். நான் 50 படங்கள் வரை நடிப்பேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. என் திரைவாழ்க்கையில் நல்ல அனுபவத்தையும் மைகல்லையும் திரும்பி பார்க்கும் தருணமாக என்னுடைய 50வது படம் மகாராஜா அமைந்துள்ளது.

Actor Aruldos

நான் இன்றைக்கு 50 படங்கள் நடித்துள்ளேன் என்றால் அதற்கு முதல் பிள்ளையார் சூழியை போட்டது அருள்தாஸ் அண்ணன்தான். அவர்தான் நான் நான் மகான் அல்ல படத்தில் துணை நடிகராக நடித்துக்கொண்டிருந்ததை பார்த்து, பின்னர் இயக்குநர் சீனுராமசாமியிடம் தென்மேற்கு பருவகாற்று படத்தின் வாய்ப்பை எனக்கு பெற்றுதந்தார். அன்றைக்கு அவர் இல்லை என்றால் இன்று நான் 50 படங்களை நடித்திருப்பேனா என்பது கேள்விக்குறிதான்” என உணர்ச்சிமிகுந்து பேசினார் நடிகர் விஜய் சேதுபதி.

பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் மற்றும்  தி ரூட் ஜெகதீஸ் மகாராஜாவை தயாரிக்கிறார்கள்.  'குரங்கு பொம்மை' நிதிலன்  இப்படத்தை இயக்குகிறார்.நட்டி, மம்தா மோகன்தாஸ், அபிராமி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். அஜினீஷ் லோகேநாத் இப்பாடத்திற்கு இசை அமைக்கிறார். விஜய்சேதுபதியின் மகாராஜா பேஸ்டர் ரசிகர்களை மிரளவைக்கும் வகையில் உள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு சினிமா வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT