வெள்ளித்திரை

வயதுக்கு மீறிய செயலால்... கல்லூரி விழாவில் அசிங்கப்பட்ட நடிகை அனிகா!

கல்கி டெஸ்க்

ல்லூரியில் நடைபெற்ற தன்னுடைய படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக சென்றிருந்த நடிகை அனிகா, மேடையில் வயதுக்கு மீறி நடந்து கொண்ட விதம் அங்கிருந்தவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

கேரளாவில் பிறந்து வளர்ந்து குழந்தை நட்சத்திரமாக மலையாளம் மற்றும் தமிழில் அறிமுகமாகி தற்போது ஹீரோயினாக அவதாரம் எடுத்துள்ளவர் அனிகா சுரேந்திரன். இவர் தமிழில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் - திரிஷா நடிப்பில் வெளியான 'என்னை அறிந்தால்' திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். அஜீத்தின் மகள் என்று பார்த்தவுடன் சொல்லும் அளவுக்கு பிரபலமானவர்.

தொடர்ந்து மீண்டும் அஜித் நயன்தாரா இணைந்து நடித்த 'விஸ்வாசம்' படத்திலும் இரண்டாவது முறையாக அஜித்துக்கு மகளாக நடித்தார். விஜய் சேதுபதிக்கு மகளாக 'மாமனிதன் படத்திலும் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து,  மா என்கிற குறும்படத்தில் பள்ளி நாட்களில் கர்ப்பமாகும் கதாபாத்திரத்தில் நடித்து அதிர்ச்சி கொடுத்த அனிகா, ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'குயின்' வெப் சீரிஸிலும் சிறிய வயது ஜெயலலிதாவாக நடித்திருந்தார். மலையாளத்திலும், குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 

தெலுங்கில் இவர் ஹீரோயினாக நடித்து வெளியான 'புட்டபொம்மா' திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் படத்தில் சுடிதார் அணிந்து மிகவும் அடக்க ஒடுக்கமாக நடித்த அனிதா, தன்னுடைய இரண்டாவது படத்தில் கவர்ச்சி அலப்பறை செய்திருந்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஓ மை டார்லிங்' படத்தில் லிப் லாக் காட்சியிலும் நடித்து சர்ச்சையில் சிக்கினார். 

தற்போது அனிகா இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, வயதுக்கு மீறி நடந்து கொண்ட விதம் அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. விழா மேடையில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு பெரிய நடிகை போல் அமர்ந்திருந்தது மட்டுமின்றி, அவரைப் பேச அழைத்தபோது ஓவராக ரியாக்ஷன் கொடுத்து,  ஓவர் ஸ்டைலாக நின்று பேசியுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில்  வெளியாக  இவர் நடந்து கொண்டதை பார்த்து பலரும், அளப்பறை தாங்க முடியவில்லை என விமர்சித்து  கமெண்ட் செய்து வருகின்றனர்.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT