வெள்ளித்திரை

கீர்த்தி சுரேஷ் அடுத்த படத்தின் புதிய அப்டேட்!

பாரதி

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் 'ரகு தாத்தா' படத்தின் 20 வினாடிகள் கொண்ட ஒரு க்ளிம்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘பைலட்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் சினிமாத்துறையில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் இதுவரை ஏறத்தாழ 30 படங்களில் நடித்துள்ளார். 2000ம் ஆண்டிலிருந்து 2014ம் ஆண்டு வரை ஐந்து மலையாளப் படங்களில் மட்டுமே நடித்தார் கீர்த்தி. பின்னர் 2015ம் ஆண்டுத்தான் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதே ஆண்டு ‘நேனு சைலஜா’ படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமானார். அதனையடுத்து தமிழில் ரஜினி முருகன், தொடரி, பைரவா, ரெமோ ஆகிய படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் கீர்த்தி சுரேஷ்.

பின்னர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய சில படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். கீர்த்தி, மஹாநதி படத்தில் நடிகை சாவித்திரியாகவே நடித்து தேசிய விருதை வாங்கினார். தொடர் வெற்றிப்படங்களைக் கொடுத்த கீர்த்தி சுரேஷ் ஷ்யாம் சிங்கா ராய், பொன்னியின் செல்வன் படங்களின் வாய்ப்பை நிராகரித்தார். இது அவரின் சினிமா துறையில் மேலும் முன்னேறுவதற்கான ஒரு வாய்ப்பைத் தவறவிட்டார் என்றே கருதப்படுகிறது.

இதனையடுத்து கீர்த்தி சுரேஷ் நடித்து அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ரகு தாத்தா படத்தின் அப்டேட் வெளியானது. இது ரசிகர்களிடையே பெரும் உற்சாகமாக வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தை சுமன் குமார் இயக்கியுள்ளார். இது அவர் இயக்கும் முதல் படமாகும். இவர் இதற்கு முன்னர் The Family man, Farzi ஆகிய படங்களுக்கு எழுத்தாளராக இருந்தவர். ரகு தாத்தா படத்தை காந்தாரா, கேஜிஎஃப், சலார் ஆகிய படங்களைத் தயாரித்த ஹோம்பேல் நிறுவனம் தயாரித்துள்ளது.

ரகு தாத்தா படத்தின் படக்குழு இது ஒரு வேடிக்கைக் கலந்த வித்தியாசமானத் திரைப்படம் என்று கூறியுள்ளது. மேலும் கொள்கை மற்றும் தேசப்பற்று இருக்கும் ஒரு பெண்ணுடைய கதை. அந்த பெண் எப்படி தன் குடும்பத்தையும் ஊரையும் காப்பாற்றுகிறாள் என்பதுதான் கதை என்று படக்குழு படத்தின் கதைக்கு ஒரு ஹின்ட் கொடுத்துள்ளது.

மேலும் இப்படத்தில் எம்.எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, ரவிந்திர விஜய், ஆனந்த சாமி, ராஜேஷ் பாலகிருஷ்னன் ஆகியோரும் நடித்துள்ளனர். படத்திற்கு சீன் ரொனால்டன் இசையமைத்திருக்கிறார். சாணிக் காயிதம், சில்லு கருப்பட்டி ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த யாமினி யக்னாமூர்த்திதான் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் மற்றும் டி.எஸ். சுரேஷ் படத்தொகுப்பு பணியை செய்திருக்கிறார். இப்படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதுமைக்கொரு எடுத்துக்காட்டு; துணிச்சலுக்கு ஓர் அடையாளம் - HBD பார்த்திபன் Sir!

நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!

இரை தந்த இறைவனுக்கு இரையாலேயே அபிஷேகம்!

கடலை மாவை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க! 

ஐப்பசி அன்னாபிஷேகம் தோன்றிய வரலாறு!

SCROLL FOR NEXT