2005ம் ஆண்டு அமீர் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவான படம் ராம். அந்தவகையில் ராம் குறித்து நடிகர் ஜீவா பேசியதைப் பார்ப்போம்.
அமீர் இயக்கத்தில் வெளியான ராம் படம் இன்றும் ரசிகர்களின் மனதை வென்றப் படமாக உள்ளது . மனநோயாளியாக ராம் என்ற பெயரில் நடித்த ஜீவாவின் நடிப்பும் அவரது தாயாக நடித்த சரண்யாவின் நடிப்பும் அவ்வளவு தனித்துவமாக இருக்கும். இருவரும் போட்டிப்போட்டிக்கொண்டு நடித்திருப்பர். இப்படத்தில் வரும் அம்மா பாடலை சிறு குழந்தைகள் கேட்டாலும் உரைந்துவிடுவார்கள். அந்த அளவிற்கு மனமுருகவைக்கும் விதமாக இருக்கும். இந்தப் படத்தில் அம்மா மீது மிகவும் பாசமாக இருக்கும் ஜீவா ஒரு மனநோயாளி.
ஜீவாவின் அம்மா சரண்யாவின் இறப்பிற்கு ஜீவாதான் காரணம் என்று அவரை கைது செய்துவிடுவர். ஆனால், உண்மையான கொலையாளி யார் என்று கண்டுபிடிப்பதுதான் கதை. ஜீவா மற்றும் சரண்யா இந்தப் படத்தில் நடித்தது குறித்து பேட்டிகளில் நிறையவே பேசியிருக்கிறார்கள். அந்தவகையில் ஜீவா ஒருமுறை இந்தப் படம் குறித்து பேசியதைப் பார்ப்போம்.
“Natural ஆன ஒரு actor ஆகனும்னு நெனச்சேன்... கூத்துபட்டறைலலாம் போய் நிறைய விஷயம் கத்துக்கனும்னு theatre acting லாம் நிறைய shows போக ஆரம்பிச்சேன்… then எனக்கு தெரிஞ்சு வந்து அந்த ஒன்றரை வருஷம் ரெண்டு வருஷத்துல கிட்டத்தட்ட 600, 700 படம் பாத்துருப்பேன்… அப்ப இந்த DVD லா நிறைய இருந்துச்சு.. and I got expose to a lot of great films, great directors, Hollywood films, award films, Iranian Films, இந்த மாதிரி நிறைய exposure ஆனதுக்கப்றம், சரி இந்த மாதிரியும் நிறைய நல்ல படங்கள் பண்ணனும்னு தோணுச்சு… 700 படங்கள் பாத்தது அப்றம்தான் I started getting in to good films… அந்த evolution அப்றம்தான் ராம்னு ஒரு படம் பண்ணேன்…” என்று பேசினார்.
நிஜமாகவே அவர் பார்த்த படங்கள் ராம் படத்தில் அவரின் நடிப்புக்கு உதவி செய்திருக்கிறது என்பதை நாம் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.