நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் 2010-ம் ஆண்டு வெளியான, எந்திரன் திரைப்படம் புதுப்பொலிவுடன் ஓடிடி தளத்தில் மீண்டும் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ரஜினி வசீகரன் என்ற விஞ்ஞானி வேடத்திலும், சிட்டி என்ற ரோபோ வேடத்திலும் நடித்திருந்தார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான படம் எந்திரன். ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடிக்க வைத்த படம் 'எந்திரன்' வெளியாகி 12 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஷங்கர் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் சந்தானம், கருணாஸ், தேவ தர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.
தமிழில் எடுக்கப்பட்டு தெலுங்கிலும் இந்தியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியான 'எந்திரன்' இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் பல வெளிநாடுகளிலும் மிகப் பெரிய வசூல் சாதனை புரிந்தது.
அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் இடம்பெற்றிருந்த கிராபிக்ஸ் காட்சிகள் படத்திற்கு பலம் சேர்த்து பிரம்மாண்ட வெற்றியை பெற்று தந்தது. தமிழில் எடுக்கப்பட்டு தெலுங்கிலும் இந்தியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியான 'எந்திரன்' இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் பல வெளிநாடுகளிலும் மிகப் பெரிய வசூல் சாதனை புரிந்தது.
எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தை '2.0' என்ற தலைப்பில் முழுக்க முழுக்க முப்பரிமாணத்தில் (3D) உருவாக்கினார். முழுக்க முழுக்க 3டியில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் என்ற பெருமிதத்துடன் வெளியான '2.0' அதன் முதல் பாகம் அளவுக்குச் சாதிக்கவில்லை என்றாலும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வெற்றிபெற்றது.
இந்நிலையில், ‘எந்திரன்’ திரைப்படம் புதுப்பொலிவுடன் மீண்டும் வெளியாகியுள்ளது. அதாவது, முதன்முறையாக டிஜிட்டலில் ரீமாஸ்டர் செய்து, 4k அல்ட்ரா எச்.டி.தரத்தில் டால்பி அட்மோஸ் மற்றும் டால்பி விஷனில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது. இந்த திரைப்படம் இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.