aishwarya rajinikanth
aishwarya rajinikanth Img Credit: Chennai Memes
வெள்ளித்திரை

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் அடுத்த திரைப்படம்! ஹீரோ யார்?

கண்மணி தங்கராஜ்

தமிழ் சினிமாவின் ஒருசில முன்னணி பெண் திரைப்பட இயக்குநர்களுள் ஒருவராக வளர்ந்து வருபவர்தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவருடைய இயக்கத்தில் வெளிவரும் ஒவ்வொரு திரைப்படமுமே தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களைப்  பெற்று வருகின்றன. ‘லால் சலாம்’ திரைப்படத்தைத் தொடர்ந்து, இவருடைய அடுத்த திரைப்படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  

இயக்குநராக என்ட்ரி:

ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கடந்த 2012ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் திரைப்பட இயக்குநராக தனது முதல் அடியை எடுத்துவைத்தார். இவர் நடிகர் தனுஷை ஹீரோவாக வைத்து ‘3’ என்ற திரைப்படத்தை இயக்கினார். அனிருத் இப்படத்தின் மூலம்தான் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார். இப்படத்தில் இடம்பெற்ற ‘கொலவெறி பாடல்’ இத்திரைப்படம் வெளியாகும் முன்பே சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகளவில் கொண்டாடப்பட்டு, முன்னதாகவே படம் குறித்த எதிர்பார்ப்பையும் தூண்டியது. பின்னர் ‘3’ படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால், இந்தத் திரைப்படம் ஐஸ்வர்யாவிற்கு ஒரு சிறந்த அறிமுக இயக்குநராக நல்லதொரு வரவேற்பைப் பெற்றுத் தந்தது.

அதுமட்டுமின்றி இத்திரைப்படம் வெளியாகி, கிட்டத்தட்ட பதினொன்று ஆண்டுகளைக் கடந்த நிலையில் இது தற்போது திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களால் அதிகளவில் கொண்டாடப்பட்டது.

aishwarya rajinikanth

வை ராஜா வை:

அடுத்ததாக, 2015 ஆம் ஆண்டு கௌதம் கார்த்திக்கை ஹீரோவாக வைத்து ‘வை ராஜா வை’ என்ற திரைப்படத்தை இயக்கினார் ஐஸ்வர்யா. யுவன்சங்கர் ராஜாவின்  இசையில் கௌதம் கார்த்திக், பிரியா ஆனந்த், விவேக், டாப்சி பன்னு, காயத்ரி ரகுராம் ,டேனியல் பாலாஜி மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.  இந்தத் திரைப்படம் எதிர்பார்த்த அளவிலான வசூலைப் பெறவில்லை என்றாலும்கூட ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’:

பின்னர் நீண்ட நாட்களாகத் திரைப்படங்கள் இயக்காமல் இருந்த ஐஸ்வர்யா, ஒரு நீண்ட இடைவேளைக்குப் பிறகு ‘லால் சலாம்’ என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் இயக்குநராக களமிறங்கினார். இந்தப் படத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இது மேலும் படத்தின் மீது இருந்த  எதிர்பார்ப்பை  ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது. இதையடுத்து சமீபத்தில் வெளியான இந்த ‘லால் சலாம்’ திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று இவருக்கு ஒரு வெற்றிப்படமாகவே அமைந்தது.

siddharth aishwarya rajinikanth

அடுத்த திரைபடத்திற்கான அப்டேட்:

இயக்குநர் ஐஸ்வர்யாவின் திரைப்படங்களைப் பொறுத்த வரையில் வசூல் ரீதியாகவும் சரி, விமர்சன ரீதியாகவும் சரி, ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பானது இருந்துகொண்டேதான் இருக்கிறது. நீண்ட கால இடைவேளைக்குப் பிறகு ‘கம் பேக்’ கொடுத்தாலும்கூட ஐஸ்வர்யா நல்ல திரைப்படங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறார். அந்த வகையில் இவருடைய அடுத்த திரைப்படமானது ‘லைக்கா’ நிறுவனம்  தயாரிக்கபோவதாகவும், மேலும் ஏ.ஆர்.ரஹ்மான்தான் இப்படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்தத் தகவல்கள் வெளியானவுடனே ஐஸ்வர்யாவின் அடுத்த திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கப்போவது யார்? என்ற கேள்வியும்  ரசிகர்கள் மத்தியில் எழத் துவங்கியது.

 இதற்குப் பதிலளிக்கும்விதமாக ரசிகர்களின் கேள்விக்கான விடை கிடைத்துள்ளது. ஐஸ்வர்யா இயக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிகர் சித்தார்த் நடிக்க இருப்பதாகவும், மேலும் அவருக்கு ஐஸ்வர்யாவின் கதை பிடித்ததால் மட்டுமே அவர் இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இத்தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நீங்க சீக்கிரமா உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்றீங்களா? ப்ளீஸ், இது மட்டும் வேண்டாமே! 

காகத்திற்கு உணவு வைப்பதன் அவசியம் என்னவென்று தெரியுமா?

அமிதிஸ்ட் கற்களைப் பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

கண்களைக் கட்டிக்கொண்டு பெருமாளுக்கு கிரீடம் சாத்தும் கோயில் எது தெரியுமா?

ஊட்டச்சத்து நிறைந்த விதவித சப்பாத்திகளின் ஆரோக்கிய நன்மைகள்!

SCROLL FOR NEXT