வெள்ளித்திரை

மாஸான தோற்றத்தில் அஜித்.. வெளியானது குட் பேட் அக்லி ஃபர்ஸ்ட் லுக்.. கொண்டாடும் ரசிகர்கள்!

விஜி

நடிகர் அஜித் நடிக்கும் Good Bad Ugly படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திர நடிகர்களில் ஒருவரான நடிகர் அஜித் குமார் நடிக்கும், குட் பேட் அக்லி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் ஞாயிற்றுக்கிழமை (மே 19) வெளியிட்டுள்ளனர். அஜித்தின் 63-வது படமாக குட் பேட் அக்லி திரைப்படத்தை மார்க் ஆண்டனி பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இந்த படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். குட் பேட் அக்லி திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு அமைந்துள்ள இந்த போஸ்டரில், நல்லவன், கெட்டவன் மற்றும் அக்லி என மூன்றையும் பிரதிபலிக்கும் வகையில் உள்ளது.

இந்த போஸ்டரில், அஜித் துப்பாக்கிகள் வைக்கப்பட்டுள்ள மேசை ஒன்றில் கை வைத்து நிற்கிறார். அஜித் பச்சை நிறத்திலான சட்டை அணிந்துள்ளார். கைகள் முழுவதும் டாட்டூ வரையப்பட்டுள்ளது. சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கேமராவைப் பார்த்தபடி நிற்கிறார். அவருக்கு இடப்பக்கம் உள்ள அஜித் கெட்டவன் போலவும், வலப்பக்கம் உள்ள அஜித் அக்லியாகவும் செய்கை செய்கின்றனர்.

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஃபேன் பாயாக மட்டுமல்லாமல், ஃபேன் பாய் இயக்குநராகவும் தருகிறேன். யுனிவர்ஸுக்கும், கடவுளுக்கும் நன்றி என இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதோடு, குட் பேட் அக்லி படம் 2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதும் அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகும் என்பதால் அடுத்த ஆண்டு பொங்கல் நம்மள்து என்று கொண்டாடி வருகின்றனர்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT