Tiger Shrof and Akshay kumar 
வெள்ளித்திரை

ரம்ஜான் ஸ்பெஷலாக வெளியானது அக்ஷய் குமாரின் ‘Bade Miyan Chote Miyan’ திரைப்படம்!

பாரதி

அக்‌ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோர் நடிப்பில், பூஜா எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவான ‘படே மியான் சோட் மியான்’ படம்  இன்று வெளியானது.

அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோர் கூட்டணியில் இன்று வெளியான  ‘படே மியான் சோட் மியான்’ படம், இந்த மாதம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட  படமாக இருந்து வந்தது.  இந்தியாவில் ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதால், ரசிகர்களுக்கு ஸ்பெஷல் படமாக இருக்கும் வகையில் படத்தை பண்டிகை நாளான இன்று வெளியிட தயாரிப்பாளர்கள் முடிவு செய்தனர்.

அக்ஷய் மற்றும் டைகர் ஷெராஃப் இடையேயான நட்புறவு ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்டது. எனவே, அதனைத் திரையரங்கில் பார்க்க ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்து வந்தனர். இந்தக் கூட்டணி, படத்தின் எதிர்பார்ப்பைக் கூட்டியது.

ஷாருக்கானின் பிளாக்பஸ்டர் படங்களான பதான் மற்றும் ஜவான் ஆகியவற்றில் பணிப்புரிந்தவரும், சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஸ்டண்ட் இயக்குனருமான கிரேக் மேக்ரே இப்படத்திலும் ஆக்‌ஷன் இயக்குனராக பணிப்புரிந்துள்ளார். இவர் ஹாலிவுட் பிளாக்பஸ்டர்களான மேட் மேக்ஸ் ப்யூரி ரோட் மற்றும் அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் போன்ற படங்களில் பணியாற்றி புகழ் பெற்றவர்.

அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம், இதுவரை பார்த்திராத ஒரு பிரம்மாண்டப் பொழுதுபோக்குப் படமாக வெளியாகியுள்ளது.  இப்படத்தை வாசு பக்னானி மற்றும் பூஜா என்டர்டெயின்மென்ட் ஆகியோர், AAZ பிலிம்ஸ் உடன் இணைந்து வழங்கியுள்ளனர். அலி அப்பாஸ் ஜாபர் எழுதி இயக்கியுள்ள இப்படம், வாசு பாக்னானி, தீப்ஷிகா தேஷ்முக், ஜாக்கி பாக்னானி, ஹிமான்ஷு கிஷன் மெஹ்ரா, அலி அப்பாஸ் ஜாபர் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. ஜீ மியூசிக் இப்படத்திற்கான இசை உரிமையைப் பெற்றுள்ளது.  இப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் இன்று வெளியானது.

மேலும் பிருத்விராஜ் சுகுமாரன், சோனாக்ஷி சின்ஹா, அலையா எஃப், மனுஷி சில்லர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘Bade Miyan Chote Miyan’ படம் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் என கலவையான ரிவ்யூக்களைப் பெற்று வருகிறது. படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் மற்றும் கிளைமேக்ஸ் சண்டைக் காட்சிகள் சிறப்பாகவுள்ளது எனவும், சலாரை அடுத்து ப்ரித்விராஜ் தரமாக நடித்திருக்கிறார் எனவும் ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர்.  வில்லனாக ப்ரித்விராஜ் வரும் காட்சிகளும், இடைவெளி காட்சிகளும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல் பழைய கதையை புதிதான கோணத்தில் காண்பித்திருக்கிறார்கள் என்றும்  கூறுகிறார்கள்.

நிதானமாக இருப்பதால் கிடைக்கும் லாபம் என்ன தெரியுமா?

NISAR - இஸ்ரோ - நாசா கூட்டு முயற்சியில் பேரிடர் கண்காணிப்பு செயற்கைக்கோள்!

துணிந்தாருக்கு துக்கம் இல்லை!

இயற்கையிடம் சுறுசுறுப்பை கற்றுக் கொள்ளுங்கள்!

தலைக்கு ஷாம்பு பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க!

SCROLL FOR NEXT