வெள்ளித்திரை

பதான் படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய அமேசான் ப்ரைம்!

கல்கி டெஸ்க்

ஷாருக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆப்ரஹாம் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள பதான் திரைப்படம் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியாகியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக ஷாருக்கானின் படங்கள் ரிலீசாகாத நிலையில், சோர்ந்து போயிருந்த ஷாருக்கானின் ரசிகர்களுக்கு உற்சாக விருந்தளிந்துள்ளது பதான் திரைப்படம். இப்படம் உலகமெங்கும் 7500-க்கும் மேற்பட்ட திரைகளில் பிரம்மாண்டமாக வெளியானது.

பதான் வெற்றி பாலிவுட் திரையுலகத்தை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அடுத்ததாக ஷாருக்கான் அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார். ஏப்ரல் மாதத்தில் அந்தப் படமும் வெளியாகவுள்ள நிலையில், தற்போது பதான் ட்ரெயிலர் தான் ஜவான் படம் தான் மெயின் பிக்சர் என்றும் அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

பதான் படத்தின் ஓடிடி உரிமையை பிரபல அமேசான் ப்ரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே பதான் வெற்றியை கொண்டாடும் வகையில், ஷாருக்கானின் இல்லத்தில் ஏராளமான ரசிகர்கள் நேற்றிரவு கூடி அவருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். ஷாருக்கானும் ரசிகர்களுடன் இந்தக் கொண்டாட்டத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Amazon

இந்தப் படம் கடந்த 5 நாட்களில் சர்வதேச அளவில் 560 கோடி ரூபாய்களைவசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெறும் சர்ச்சைகளுக்கிடையில்படம் வெளியான நிலையில், அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து படம் வசூல்வேட்டை நடத்தி வருகிறது. படத்தின் பாடல்கள் உள்ளிட்ட அனைத்தும் ஷாருக்கானின் படத்திற்கான அம்சங்களுடன் அமைந்துள்ளது படத்தின் சிறப்பாகபார்க்கப்படுகிறது.

இதுவரை படம் அதாவது ஒரு வார முடிவில் உலகம் முழுவதும் ரூ. 560 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சித்தார்த் ஆனந்த் இயக்கிய இப்படம் பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும் தற்போது வரை இத்திரை படம் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வந்து உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தும் பத்திரிகை!

தண்ணீர் பாட்டில் என்றாலே பிளாஸ்டிக் மட்டுமேதானா? மாற்றுவகைகள் உண்டா?

ஒன்பது வாசல் கடந்து மூலவரை தரிசிக்கும் கோயில் எங்குள்ளது தெரியுமா?

சூரியகாந்தி விதையின் வியக்க வைக்கும் மருத்துவப் பலன்கள்!

Type 1 Diabetes: இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை! 

SCROLL FOR NEXT