நடிகர் சூரியின் கொட்டுக்காளி படத்தில் ஹீரோயினாக நடித்த Anna Ben குறித்து இயக்குநர் மிஸ்கின் பேசியிருக்கிறார்.
சூரி, அன்னா பென் ஆகியோர் நடித்தக் கொட்டுக்காளி படத்தை பிஎஸ்.வினோத்ராஜ் இயக்கியிருக்கிறார். பெர்லின் திரைப்பட விழாவில் பாராட்டுகளை பெற்றிருக்கிறது கொட்டுக்காளி. இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். கொட்டுக்காளி படம் திரைக்கு வருவதற்கு முன்னரே சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இதனையடுத்து இந்தப் படத்திற்கு வெளிநாட்டில் கூட அவ்வளவு வரவேற்பு கிடைத்தது. சாதாரண காமெடி நடிகராக இருந்த சூரியை இப்படம், ஒரு சர்வதேச நடிகராக மாற்றியது. அந்த அளவிற்கு இந்தப்படம் சூரிக்கு பெருமைப்பெற்றுத் தந்திருக்கிறது.
இந்த படத்தை திரையில் வெளியிடுவதற்கு முன்னரே பிரபல இயக்குநர்கள் படத்தைப் பார்த்து புகழ்ந்து தள்ளினர். அந்தவகையில் இதுகுறித்து இயக்குநர் மிஸ்கின் பேசியதைப் பார்ப்போம்.
“இப்போலாம் தமிழ் பெண்கள் நடிக்க வரதே இல்ல. அவங்க கேக்குறதெல்லாம், சார் ரெண்டு பாட்டு இருக்கா? மூன்று டேன்ஸ் இருக்கா? – ன்னுதான். தௌபா தௌபான்னு எதாவது டேன்ஸ் ஸ்டெப் இருக்கா? ஹூக் ஸ்டெப் இருக்கான்னுதான் பாப்பாங்க. தமிழ பொம்பளைங்களே கிடையாது. அதனால, பஸ் ஏறி போய்ட்டு அன்னா பென்னு ஒரு சிறுக்கிய புடிச்சுட்டு வந்துட்டான். ஒரு பேய் அரக்கி அவ…
அவ எத்தன வார்த்த பேசியிருக்கான்னா… ஒன்றரை வார்த்த பேசியிருக்கான்னு நெனைக்கிறேன். ஒரு பாட்டு வேற பாடிட்டா அவ. அதுக்கு அடி.. ஒரே அடி.. சூரி போட்டு ஒரு மணி நேரம் அடி… இந்த சமுகம் அப்படித்தானே இருக்கு. ஒரு பெண் பாடக்கூடாதுன்னு. ஒரு Extra ordinary performance. அநேகமா, இந்த ஆண்டிற்கான National award அந்த குழந்தைக்கு கிடைக்கும்னு நெனைக்கிறேன். அந்தளவிற்கு நடிச்சுருக்காங்க…” என்று மிஸ்கின் புகழ்ந்துத் தள்ளினார்.
அன்னா பென் தற்போது வேகமாக வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார். மலையாள நடிகையான இவர், தற்போது தெலுங்கு திரையுலகில் கல்கி படத்தில் மாஸ் கதாபாத்திரத்திலும், தமிழ் திரையுலகில் கொட்டுக்காளி படத்தில் தனித்துவமான கதாபாத்திரத்திலும் நடித்து தென்னிந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.