லெஜண்ட் சரவணன்
லெஜண்ட் சரவணன் 
வெள்ளித்திரை

மாஸாக வரும் லெஜெண்ட் சரவணன்.. அடுத்த படத்தின் பக்கா ப்ளான்!

விஜி

அடுத்த படத்திற்கு ஸ்கெட்ச் போட்டு லெஜெண்ட் சரவணன், மாஸாக களமிறங்குகிறார்.

சரவணா ஸ்டோர்ஸ் விளம்பர படங்களை இயக்கி வந்த ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் தி லெஜண்ட் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் லெஜண்ட் சரவணன். கூடிய சீக்கிரமே புதிய பட அறிவிப்பை வெளியிடுவேன் எனக் கூறியிருந்த நிலையில், அவரது அடுத்த படத்தை யார் இயக்கப் போறாங்க என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

வெறும் விளம்பரத்தில் நடித்து வந்த லெஜண்ட் சரவணன், தி லெஜண்ட் என்ற படத்தில் அட்டகாசமாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இந்த படம் கணிசமான வெற்றியையே கொடுத்த நிலையில், அடுத்த படம் நல்ல படியாக கொடுக்க வேண்டும் என இயக்குனரை தேடி வந்தார் லெஜண்ட் சரவணன்.

தற்போது தனுஷின் கொடி, சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, சூரியின் கருடன் உள்ளிட்ட படங்களை இயக்கி வரும் துரை செந்தில் குமார் தான் லெஜண்ட் சரவணனின் அடுத்த படத்தை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியானது. சில நாட்களுக்கு முன்பு இது குறித்து இயக்குனர் அளித்த பேட்டியில், சரவணனை வைத்து படம் இயக்கப்போவது உண்மை தான். ஆனால் அது அடுத்த படமா என்பது தெரியவில்லை என கூறியுள்ளார். இதன் மூலம் சரவணனின் அடுத்த படம் வெயிட்டாக வரப்போகிறது என்பது உறுதியாகியுள்ளது.

தற்போது இவரது இயக்கத்தில் உருவாகி வரும் சூரி படத்தின் போஸ்டர் பாடல்கள் கவனம் பெற்றன. தொடர்ந்து சரவணன் படமும் ஹிட்டடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஜிப்ரானை ஒப்பந்தம் செய்திட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சொந்த நிறுவனம் என்பதால் முதல் படத்தை போலவே இதிலும் பெரிய பட்ஜெட்டில் படத்தினை தயாரித்திட சரவணன் முடிவு செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

நீங்க சீக்கிரமா உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்றீங்களா? ப்ளீஸ், இது மட்டும் வேண்டாமே! 

காகத்திற்கு உணவு வைப்பதன் அவசியம் என்னவென்று தெரியுமா?

அமிதிஸ்ட் கற்களைப் பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

கண்களைக் கட்டிக்கொண்டு பெருமாளுக்கு கிரீடம் சாத்தும் கோயில் எது தெரியுமா?

ஊட்டச்சத்து நிறைந்த விதவித சப்பாத்திகளின் ஆரோக்கிய நன்மைகள்!

SCROLL FOR NEXT