வெள்ளித்திரை

எனது 538 படம்!

பாலிவுட் பூமராங்!

மும்பை மீனலதா

சிறந்த பாலிவுட் நடிகர் அனுபம் கேரைத் தெரியாதவர்கள் கிடையாது. முக்கிய நடிகர்களில் ஒருவராகத் திகழும் இவர் இதுவரை 537 படங்களில் நடித்துள்ளார். அடுத்த படத்தில் சுதந்திரப் போராட்ட வீரரும் இந்திய தேசிய கீதத்தை இயற்றியவருமான ரவீந்தீரநாத் தாகூர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எனது 538ஆவது படத்தில் குருதேவ் ரவீந்திரநாத் தாகூராக நடிப்பதில் மகிழ்வாக இருக்கிறது. உரிய நேரத்தில் கூடுதல் விவரங்களை உங்களுடன் பகிர்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தற்சமயம், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை இயக்கிய அக்னிஹோத்ரி இயக்கும் ‘தி வேக்சின் வார்’, அனுராக்பாசு இயக்கத்தில் உருவாகும் ‘மெட்ரோ இன் டினோ’ மற்றும் கங்கனா இயக்கும் ‘எமர்ஜென்ஸி’ ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

ஷாருக்கானுக்கு நடிக்கத் தெரியாது! அழகில்லை!

53 வயதாகும் அமெரிக்காவில் பிறந்து பாகிஸ்தானில் வளர்ந்த பிரபல நடிகை மஹ்னூர் பலோச் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், நடிகர் ஷாருக்கான் குறித்த கேட்ட கேள்விக்கு,

“அவர் ஒரு நல்ல மனுஷன். மிகப் பெரிய ஒளி உள்ளது. ஆனால் நடிகர்களுக்குத் தேவையான அழகு என்கிற அளவுகோளில் வைத்தப் பார்த்தால், அவ்வளவு அழகு இல்லை என்று கூறியதோடு தொடர்ந்து ஷாருக்கானுக்கு ஒழுங்காக நடிக்கத் தெரியாது. ஆனால் நல்ல பிஸினஸ்மேன். தனது படத்தை எப்படி மார்க்கெட் செய்து உலகளவில் வசூல் சாதனைகளைப் படைக்க இயலுமென்பதைதத் தெரிந்து வைத்திருக்கிறார். எனது கருத்து அவரது ரசிகர்களுக்கப் பிடிக்காமல் போகலாம். எனது மனதில் பட்டதைச் சொல்கிறேன்” என பதில் அளித்தார்.

ஷாருக்கான் ரசிகர்களுக்கு கோபமோ கோபம். “ஷாருக்கான் நடிப்பு மற்றும் அழகு குறித்து விமரிசிக்க அந்த பாகிஸ்தான் நடிகைக்கு என்ன தகுதி இருக்கிறது? ஒட்டுமொத்த  பாகிஸ்தான் நடிகர்களும் சேர்ந்தாலும் கூட ஷாருக்கானுக்கு கால்தூசு பெற மாட்டார்கள். ஷாருக்கான் குறித்து பேசியதால்தான் இந்த நடிகையைப் பற்றித் தெரியும். இல்லாவிட்டால்  தெரியாது. ப்ளாக்பஸ்டர் ஹிட்டை ஷாருக்கான் கொடுக்கப் போகிறார். என்ன வேணாலும் பேசு” என அந்த நடிகையை கடுமையாக திட்டி தீர்த்து வருகி்னறனர் ரசிகர்கள்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT