Azhagi movie re-release
Azhagi movie re-release 
வெள்ளித்திரை

2002ல் ரசிகர்களை கவர்ந்த 'அழகி' 22 வருடங்கள் கழித்து ரீ ரிலீஸ்..!

சேலம் சுபா

ஆண் பெண் என அனைத்து வகையான ரசிகர்களையும் வயது வித்தியாசம் இல்லாமல் ரசிக்க வைத்து அவர்களின் இளமைக் கால நினைவுகளுக்குள் கொண்டு சென்றது 'அழகி' என்றால் மிகையல்ல ஆம். தங்கர் பச்சான் இயக்கத்தில் வெளிவந்த அற்புதமான கலை காவியம் 'அழகி'. இந்த திரைப்படத்தின் ரீ ரிலீஸ் பற்றிய செய்திகள் தற்போது இணையத்தில் பேசப்படுகிறது.

2002 ஜனவரியில் பொங்கல் ரிலீசாக வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் பார்த்தவர்களை பள்ளிப்பருவ நினைவுகளுக்கு கரம் பிடித்து அழைத்துச் சென்றது. பள்ளி தோழியுடனான காதல் ஒரு கட்டத்தில் சொல்லாமல் கொள்ளாமல் காணாமற் போக தனக்கு அமைந்த மனைவியுடன் இல்லறத்தை இனிமையாக வாழும் நாயகன் கண்களில் படுகிறாள் பள்ளிப்பருவ காதலி.. அதுவும் எப்படி? கட்டிய கணவன் இறந்து ஆதரவற்ற நிலையில் தான் பெற்ற மகனுடன்..

மனம் பதைக்க அவளைத் தன் வீட்டுக்கு பணிப்பெண்ணாக அழைத்து ஆதரவு தருகிறார் நாயகன். இதைத் தொடர்ந்து அவர்களுக்குள் ஏற்படும் காதல் தடுமாற்றங்கள், மனைவியின் சந்தேகம் போன்ற உளவியல் மற்றும் நிதர்சன வாழ்விடல் சார்ந்த அற்புதமான காதல் காவியமானது அழகி.

20-01-2002 கல்கி வார இதழில் இப்படத்தின் விமர்சனம் 'டிஸ்டிங்ஷன்' பெற்று வெளியானது.

Azhagi movie review
Azhagi movie review

கிராமம் சார்ந்தபகுதிகளில் உள்ள எளிய மக்களின் வாழ்க்கையைப் பற்றி இந்தப் படம் பேசுகிறது. அழகியின் அடிப்படை ஆதாரமாக ஆன்மா விரும்பும் அன்பும் காதலும் இருப்பதே இப்படம் இத்தனை வருடங்கள் கடந்தும் திரும்பவும் வருவதற்கு காரணம் என்கின்றனர் ரசிகர்கள். எத்தனை டெக்னாலஜி வந்தாலும் இயல்பான மிகையற்ற காதல் உணர்வுகளை மக்கள் மறப்பதில்லை.

நீங்க சீக்கிரமா உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்றீங்களா? ப்ளீஸ், இது மட்டும் வேண்டாமே! 

காகத்திற்கு உணவு வைப்பதன் அவசியம் என்னவென்று தெரியுமா?

அமிதிஸ்ட் கற்களைப் பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

கண்களைக் கட்டிக்கொண்டு பெருமாளுக்கு கிரீடம் சாத்தும் கோயில் எது தெரியுமா?

ஊட்டச்சத்து நிறைந்த விதவித சப்பாத்திகளின் ஆரோக்கிய நன்மைகள்!

SCROLL FOR NEXT