வெள்ளித்திரை

கல்விக்கூட பிரச்னையைப் பேசும், ‘காலேஜ்ரோடு’

எம்.கோதண்டபாணி

யக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான கபாலி மற்றும் பரியேறும் பெருமாள், கஜினிகாந்த், டானாக்காரன் போன்ற திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் லிங்கேஷ். இவர் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'காலேஜ் ரோடு.'

இன்றைய இளைஞர்கள் அனைவரின் வாழ்விலும் மிக அவசியத் தேவையாக இருப்பது கல்வி. அந்தக் கல்வியின் தரம் இன்று என்னவாக இருக்கிறது? அது அனைவருக்குமானதாக உள்ளதா? எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை அது எப்படி மாற்றி அமைக்கப் போகிறது என்பதைப் பற்றியும், கல்வி நிலையங்களில் உள்ள பிரச்னைகளைப் பற்றிப் பேசும் படமாகவும் தயாராகியிருக்கிறது, 'காலேஜ் ரோடு.'

மோனிகா, ஆனந்த்நாகு, KPY அன்சர், அக்சய்கமல், பொம்முலக்‌ஷ்மி, நாடோடிகள் பரணி, மெட்ராஸ் வினோத், அறுவிபாலா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்தத் திரைப்படத்துக்கு, ஆப்ரோ இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு-கார்த்திக் சுப்ரமணியம், எடிட்டிங்-அசோக்.

“கல்லூரி மாணவர்களின் நலனை மனதில் வைத்து, பரபரப்பான திருப்பங்களோடு, காதல், நட்பு, நகைச்சுவை கலந்த கமர்சியல் படமாக இதை உருவாக்கி இருக்கிறோம்” என்கிறார் இந்தத் திரைப்படத்தின் இயக்குநர் ஜெய் அமர்சிங்.

இந்தத் திரைப்படத்தைக் கண்டு ரசித்த இயக்குநர் பா.இரஞ்சித், படக்குழுவினருக்குத் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
MP எண்டர்டெயின்மெண்ட் பிரவீன் மற்றும் சரத் இவர்களுடன் ஜனா துரைராஜ் மனோகர் இணைந்து தயாரித்திருக்கும் இந்தத் திரைப்படம் டிசம்பர் மாதம் 30ம் தேதி வெளியாகிறது.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT