Meera chopra wedding 
வெள்ளித்திரை

தொழிலதிபரை திருமணம் செய்த ‘அன்பே ஆருயிரே’ கதாநாயகிக்கு குவியும் வாழ்த்துகள்!

பாரதி

எஸ்.ஜே.சூர்யா இயக்கிய 'அன்பே ஆருயிரே' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான மீரா சோப்ராவிற்குத் தொழிலதிபர் ரக்ஷித் கெஜ்ரிவாலுடன் நேற்றுத் திருமணம் நடந்து முடிந்தது. திருமணப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்துக்கொண்டார் மீரா சோப்ரா.

பிரபல பாலிவுட் ஹீரோயின் பிரியங்கா சோப்ராவின் தங்கையான மீரா சோப்ரா 2005ம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா இயக்கிய அன்பே ஆருயிரே படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். தமிழில் ஜாம்பவான், மருதமலை, காளை, ஜகன்மோஹினி, இசை, கில்லாடி ஆகிய படங்களில் நடித்தார். இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்னர் தனக்குத் திருமணம் நடைபெறவுள்ளதாக அறிவித்தார். அதன்படி நேற்று ஜெய்ப்பூரில் உள்ள ஒரு பெரிய ரிசார்ட்டில் அவரது திருமணம் நடந்து முடிந்தது.

மீரா சோப்ரா தொழிலதிபர் ரக்ஷித் கெஜ்ரிவாலை மணம்முடித்தப் புகைப்படங்களைத் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இதனையடுத்து அனைவரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். தொழிலதிபர்களும் சினிமா பிரபலங்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். ஜெய்ப்பூரில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களை மட்டுமே அழைத்து எளிதாக திருமணத்தை நடத்தியதால் சினிமா பிரபலங்கள் திருமணத்தில் கலந்துக் கொள்ளவில்லை. எனினும் சந்தீப் சிங், ஆனந்த் பண்டித், அர்ஜான் பாஜ்வா, கௌரவ் சோப்ரா ஆகியோர் புகைப்படங்களின் கம்மென்ட்டில் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இதனையடுத்துத் திருமணத்தில் மீரா சிவப்பு நிற லெஹங்கா அணிந்திருந்தார். மற்றும் ரக்ஷித் ஐவரி ஷர்வானி அணிந்திருந்தார்.

மீரா இந்த ஆண்டு ஜனவரி மாதம் தனது நீண்ட நாள் காதலரைக் கரம் பிடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதேபோல் அவர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டார். ஒரு மாத காலமாகத் திருமண ஏற்பாடுகளைச் செய்து வரும் அவர் ஒரு கூலிங்கான இடத்தில் தான் தனது திருமணம் நடைபெற வேண்டும் என்று ஆசைப்பட்டார். வேர்வையும் வெயிலும் இருக்கவே கூடாது என்று ஒரு மாதமாகவே இடத்தைத் தேடி வந்தார். நண்பர்கள் பலர் கோவா என்று கூறும்போது மீரா ஜெய்ப்பூர் தான் என்ற முடிவை எடுத்தார். அதேபோல் தற்போது அதே ஜெய்ப்பூரில் அவருக்குப் பிடித்தவகையில் எளிதாகவும் அழகாகவும் திருமணம் நடந்து முடிந்தது.

நிதானமாக இருப்பதால் கிடைக்கும் லாபம் என்ன தெரியுமா?

NISAR - இஸ்ரோ - நாசா கூட்டு முயற்சியில் பேரிடர் கண்காணிப்பு செயற்கைக்கோள்!

துணிந்தாருக்கு துக்கம் இல்லை!

இயற்கையிடம் சுறுசுறுப்பை கற்றுக் கொள்ளுங்கள்!

தலைக்கு ஷாம்பு பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க!

SCROLL FOR NEXT