வெள்ளித்திரை

தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர்!

லதானந்த்

சத்ய ஜோதி பிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்கும், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிக்கும் படம் ‘கேப்டன் மில்லர்’.

இப்படத்தின் படப்பிடிப்பு குறித்தான அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இப்படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடிக்க, பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். பிரபல தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் முக்கிய கதாபாத்திரம் ஏற்றுள்ளார். இவர்களுடன் ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ், குமரவேல், டேனியல் பாலாஜி, மூர், நாசர், விஜி சந்திரசேகர், சுவயம்சிதா தாஸ், பிந்து, அருணோதயன், ஆண்டனி, பால சரவணன் மற்றும் சிலர் இணைந்து நடிக்கின்றனர்.

ஜிவி பிரகாஷ் குமார் (இசை), மதன் கார்க்கி (வசனம்), ஸ்ரேயாஸ் கிருஷ்ணா (ஒளிப்பதிவு), நாகூரன் (எடிட்டர்), T. ராமலிங்கம் (கலை), பூர்ணிமா ராமசாமி & காவ்யா ஸ்ரீராம் (ஆடை வடிவமைப்பு), திலீப் சுப்பராயன் (ஆக்சன்), ட்யூனி ஜான் 24am (பப்ளிசிட்டி டிசைனிங்) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் பணியாற்றுகின்றனர்.

‘கேப்டன் மில்லர்’ படத்தை செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர். இப்படத்தை G.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்புச் செய்கின்றனர். அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார்.

கேப்டன் மில்லர் 1930-40 காலகட்டத்தை பின்னணியாகக் கொண்ட ஒரு வரலாற்றுத் திரைப்படமாகும். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படவுள்ளது.

அனுபவம் கற்றுத் தருவது எதை தெரியுமா?

மாசற்ற சூழலே நோயற்ற வாழ்வு கொடியதிலும் கொடியது காற்று மாசு!

ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறும் அரியவகை மீன் பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா?

கோடைக்காலத்திற்கு ஏற்ற பெண்களுக்கான ஹேர்கட் என்னென்ன தெரிஞ்சிக்கலாம் வாங்க!

ஊட்டியையே தூக்கி சாப்பிடும் குளிர்ந்த காற்று வீசும் ராமக்கல்மேடு போவோமா வாருங்கள்!

SCROLL FOR NEXT