Dhanush  
வெள்ளித்திரை

'ப்ளாக் பஸ்டர்' பிறந்தநாள் பரிசு... மகிழ்ச்சியில் தனுஷ் போட்ட பதிவு!

விஜி

நடிகர் தனுஷ் பிறந்தநாளையொட்டி போட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் தனுஷ் தமிழ் மொழியில் நடிக்கத் தொடங்கி, தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகள் வரை சென்றுவிட்டார். இவர் நடித்த 3 திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஒய் திஸ் கொலைவெறிடி' எனும் பாடல், தனுஷின் புகழை முதலில் உலகளவில் வெளிச்சமிட்டுக் காட்டியது. இளம் வயதில் இதுவரை 2 தேசிய விருதுகளை வென்ற நடிகர் என்னும் பெயரையும் தனுஷ் பெற்றிருக்கிறார்.

நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் எனப் பல துறைகளிலும் தன் திறமைகளை வளர்த்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல், இயக்குநராகவும் தன் திறமையையும் நிரூபித்து வருகிறார் தனுஷ். அந்த வகையில் நடிகர் தனுஷ் இயக்குநர் அவதாரம் எடுத்தபோது, நடிகர் ராஜ்கிரண் மற்றும் ரேவதியை கதையின் மாந்தர்களாக வைத்து இயக்கி நடித்த படம்தான், பவர் பாண்டி.

நடிகர் தனுஷ் தனது கேரியரில் மதிப்புமிக்க, தனது 50ஆவது படமான ‘ராயன்’ படத்தைத் தானே இயக்கி நடித்திருந்தார். ஜூலை 26ஆம் தேதி வெளியான இந்தப் படத்தில் தனுஷ் மொட்டையடித்த நிலையில் நடித்துள்ளார். இப்படத்துக்கு இசையினை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் செய்திருக்கிறார். தனுஷும் ஏ.ஆர்.ரகுமானும் சேர்ந்து பாடிய பாடல் இணையத்தில் டிரண்டானது.

ஒளிப்பதிவினை ஓம்பிரகாஷ் மேற்கொண்டார். இப்படமும் வெளியான இரண்டே நாட்களில் 23 கோடி ரூபாய் வசூலித்து சாதனைப் புரிந்துள்ளது. இது ஒரு புறம் போய்க்கொண்டிருக்க, தனுஷ் தனது 51ஆவது படத்திலும் தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்தார்.

மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்து இப்படம் உலகளவில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது. இந்த நிலையில், நடிகரும், இயக்குனருமான தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் ராயன் படத்தின் வெற்றி குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மக்கள், நண்பர்கள், பிரஸ் - மீடியா மற்றும் என்னுடைய துணையாக இருக்கும் தூண்கள் எனது ரசிகர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். இது என்னுடைய சிறந்த ப்ளாக் பஸ்டர் பிறந்தநாள் பரிசு. ஓம் நமசிவாய என கூறி தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.

Dhanush post

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT