VANANGAAN
VANANGAAN 
வெள்ளித்திரை

இயக்குநர் பாலாவின் வணங்கான்: கவனம் ஈர்த்துள்ள நடிகர் அருண் விஜயின் போஸ்டர்!

ராகவ்குமார்

மிழ் சினிமாவில் இயக்குநர் பாலாவுக்கு என்று தனியிடம் உண்டு. அவருடைய இயக்கத்தில் சமீபத்தில் வணங்கான் படத்தை நடிகர் சூர்யா நடிப்பதாக இருந்தது. ஆனால், படப்பிடிப்பு தொடங்கி சில நாட்களில் படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகிகொள்வதாக இயக்குநர் பாலா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது வணங்கான் படத்தில் நடிகர் அருண் விஜய் இருக்கும் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

வணங்கான் படத்தின் போஸ்டரில்  உடம்பெல்லாம் சேறு பூசிக்கொண்ட அருண் விஜய் ஒரு கையில் பிள்ளையார் சிலையையும், மற்றொரு கையில் பெரியார் சிலையையும் வைத்திருக்கிறார். பெரியார் தீவிர கடவுள் மறுப்பு கொள்கையையும், பகுத்தறிவு கொள்கையும் கொண்டவர்.குறிப்பாக பெரியார் பிள்ளையார் சிலையை உடைத்ததாக பலர் சொல்வார்கள்.                                                       

இந்த இரண்டு சிலைகளையும் ஒருவரே கையில் வைத்திருப்பது பல்வேறு கேள்விகளை ஏற்படுத்தி உள்ளது. வணங்கான் கடவுள் பற்றி பேசும் படமா?பகுத்தறிவு கொள்கைகளை கொண்ட படமா? அல்லது சாதிய கட்டமைப்பை கேள்வி கேட்கும் படமா? என்ற கேள்விகள் எழுகிறது. போஸ்டர் வெளியாகி சில மணி நேரங்களில் பார்வையாளர்கள் பலரை ஈரத்துள்ளது. 

முரண்களை போஸ்டரில்  கொண்ட இப்படத்தில் அருண் விஜய்யுடன்  ரோஷினி,மிஸ்கின் முக்கிய கதா பாத்திரத்தில் நடித்துள்ளார்கள். வணங்கான் படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் இசையமைத்துளார்.தாரை தப்பட்டை படத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து இயக்குநர் பாலாவின் நேரடி இயக்கத்தில் வெளியாகும் வணங்கான் படம் தமிழ் சினிமா வட்டாராத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

கார் விபத்தில் சிக்கி பலியான பிரபல சீரியல் நடிகை... ரசிகர்கள் அதிர்ச்சி!

கட்டடக் கலைக்கு புகழ் பெற்ற ஜெய்ப்பூர் அரண்மனை கோட்டைகள்!

ஃபேஷன் உலகில் டிரெண்டாகி வரும் புதுவித சோக்கர் நெக்லஸ்கள் பற்றி பார்க்கலாம்!

விமர்சனம்: உயிர் தமிழுக்கு - சமகால அரசியல் நையாண்டி!

புதிய பார்வை எப்பொழுது ஏற்படும் தெரியுமா?

SCROLL FOR NEXT