இயக்குனர் சங்கர் 
வெள்ளித்திரை

தமிழ்த் திரையுலகில் பிரம்மாண்டங்களைக் காட்டியவர் இயக்குனர் சங்கர்!

க.இப்ராகிம்

மிழ்த் திரையுலகை உலகத் திரையுலகிற்கு இணையானதாக மாற்றி பிரம்மாண்டங்களை தனது படங்களில் காட்டிய இயக்குனர் சங்கரின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.

தமிழ்த் திரையுலகில் பிரம்மாண்டம் என்றால் நினைவுக்கு வருவது இயக்குனர் சங்கர். இவர் எடுத்த அனைத்து படங்களும் தமிழ் திரையுலகில் மிக முக்கிய திரைப்படங்களாக வரலாறு படைத்திருக்கிறது.

மேலும், இவர் எடுக்கும் படங்கள் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்படுவதே இவரை பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைப்பதற்கு காரணமாக அமைந்தது. மேலும் அதிகப்படியான லாபத்தை ஈட்டுவதிலும் இவரின் படங்கள் முன்னணியில் இருக்கும். குறிப்பாக, இயக்குனர் சங்கர் எடுக்கக்கூடிய படங்களில் ஏதாவது ஒரு பாட்டு முக்கிய காட்சிகளைக் கொண்டதாக இருக்கும்.

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் இயக்குனர் பவித்ரன் ஆகியோரின் உதவி இயக்குனராக பணியை தொடங்கிய சங்கர், எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான வசந்த ராகம் மற்றும் சீதா ஆகிய படங்களில் சிறு வேடங்களில் இவர் நடித்துள்ளார்.

அதன் பிறகு 1993ம் ஆண்டு தனது முதல் படமான ஜென்டில்மேன் படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் இயக்கி சாதனை படைத்தார். அந்தப் படம் அதிகப்படியான வசூலை ஈட்டியதால் இயக்குனர் சங்கரின் மீதான நம்பிக்கை திரை வட்டாரத்தில் அதிகரித்தது. இதனால் தயாரிப்பாளர்கள் பலரும் சங்கரை நம்பி பணம் போட்டால் வீணாகாது என்று பேசும் அளவிற்கு அவருடைய திரைப் பயணம் நகர்ந்தது.

மேலும் காதலன், இந்தியன், ஜீன்ஸ் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெற்றியைப் பெற, இயக்குனர் சங்கரின் பெயர் இந்தியத் திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்தது. குறிப்பாக, ஜீன்ஸ் திரைப்படத்தில், ‘பூவுக்குள் ஒளிந்திருக்கும்’ பாடலில் உலகின் ஏழு அதிசயங்களையும் காட்சிப்படுத்தி இருப்பார் இயக்குனர் சங்கர்.

இதைத்தொடர்ந்து வெளியான, ‘முதல்வன்’ படம் சங்கர் திரையுலகில் முக்கிய படங்களில் ஒன்றாக மாறியது. பாய்ஸ், சிவாஜி, எந்திரன் ஆகிய முன்னணி படங்களை இயக்கி இந்திய துறையில் முக்கிய இயக்குனர்களின் ஒருவராக சங்கர் இடம் பிடித்தார்.

நண்பன், ஐ, எந்திரன் 2.0 படங்களும் இயக்குனர் சங்கர் இயக்கிய முக்கியமான படங்களாகும். இயக்குனர் சங்கர் திரைத்துறைக்கு அறிமுகமாகி பல ஆண்டுகள் ஆனாலும் சில படங்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். ஆனால், அவரின் ஒவ்வொரு படங்களுமே ஒவ்வொரு ஆவணங்களாக சங்கரின் பெயரை இந்திய சினிமாவிற்கு உயர்த்தி இருக்கிறது.

தற்போது நடிகர் ராம்சரணை வைத்து தெலுங்கில் ‘கேம் சேஞ்சர்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். அதோடு தமிழில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், ‘இந்தியன் 2’ படத்தையும் இயக்கி வருகிறார். இயக்குநர் சங்கரின் படத்தில் பிரம்மாண்டம் எந்த அளவிற்கு இருக்கிறதோ, அதே அளவிற்கு சமூகக் கருத்துக்களும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT