Indian 3 
வெள்ளித்திரை

ஷங்கரின் மாஸ்டர் ப்ளான்... இந்தியன் 3 ரிலீஸ் தேதியும் அறிவிப்பு... எப்போது தெரியுமா?

விஜி

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் ரிலீஸ் தேதி ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது இந்தியன் 3 படத்தின் வெளியீட்டு தேதியும் கசிந்துள்ளது.

கமல்ஹாசனும் இயக்குனர் ஷங்கரும் முதன்முறையாக இணைந்து பணியாற்றிய படம் இந்தியன். கடந்த 1996-ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் மிகப்பெரிய வெற்றியை ருசித்தது. அப்படத்தின் வெற்றிக்கு பின் தற்போது சுமார் 18 ஆண்டுகள் கழித்து அவர்கள் இருவரும் இந்தியன் 2 படத்துக்காக மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்தை லைகா நிறுவனமும், ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனமும் இணைந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது.

முதல் பாகம், மிகப் பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம், எடுக்கப் பட உள்ளதாக கடந்த நான்கு வருடத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்டது. கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதற்கு முந்தைய படங்களில் ஏ.ஆர்.ரகுமான் அல்லது ஹாரிஷ் ஜெயராஜ் ஆகிய இரு இயக்குனர்களுடன் மட்டும் பணியாற்றி வந்த ஷங்கர், தற்போது முதன்முறையாக அனிருத் உடன் கூட்டணி அமைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்தியன் 2 படத்தின் கமல்ஹாசன் நடிக்க இருந்த மொத்த காட்சிகளும் எடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில், படம் ரிலீஸ் தேதி எப்போது என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். அதன்படி இந்தியன் 2 திரைப்படம் வருகிற ஜூலை மாதம் 12-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இப்படத்தின் முதல் பாடல் மே 22-ந் தேதி வெளியிடப்பட உள்ளது.

அதுமட்டுமின்றி அண்மையில் இந்தியன் 2 படத்தின் புரமோஷனுக்காக பெங்களூரு - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியின் தமிழ் வர்ணனையின் போது கலந்துகொண்ட இயக்குனர் ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் அப்படம் குறித்த பல்வேறு அப்டேட்டுகளையும் வெளியிட்டனர். அதில் ஒன்று தான் இந்தியன் 3 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட்.

அதாவது இந்தியன் 2 படம் ரிலீஸ் ஆன 6 மாதத்தில் இந்தியன் 3 திரைப்படம் வெளியிடப்படும் என அறிவித்தனர். ஏற்கனவே அஜித்தின் குட் பேட் அக்லி படம் பொங்கலுக்கு ரிலீசாகவுள்ளதால் இந்த படம் அதற்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT