கருமேகங்கள் கலைகின்றன 
வெள்ளித்திரை

திரை விமர்சனம்: கருமேகங்கள் கலைகின்றன

ராகவ்குமார்

அன்பும், பிராயசித்தமும். சிறந்த படங்களை மட்டுமே சினிமாவாக தருவேன் என உறுதியுடன் இருக்கும் தங்கர்பச்சான் 10 ஆண்டுகளுக்கு பின் கருமேகங்கள் கலைகின்றன என்ற படத்தை இயக்கிஉள்ளார்.

மனித உணர்வுகளின் அன்பின் தேடலாக வந்துள்ளது இப்படம். தனது சிறு கதையை படமாக தந்துள்ளார் தங்கர் பாச்சான். ஓய்வு பெற்ற நீதிபதி ராமநாதனும் (பாரதி ராஜா ) ஹோட்டலில் வேலை செய்யும் வீரமணியும் (யோகிபாபு ) பேருந்தில் ராமேஸ்வரம் நோக்கி பயணம் செய்கிறார்கள். இருவரும் அன்பை தேடி செல்கிறார்கள். நீதிபதி தன் வாழக்கையில் செய்த ஒரு தவறை நேர் படுத்த பல இடங்களில் ஒரு நபரை தேடி அலைகிறார். வெவ்வேறு படி நிலைகளில் உள்ள இருவரும் ஒருவருக்கொருவர் பிரச்சனைகள் தீர உதவி செய்து கொள்கிறார்கள்.

இவர்கள் இருவருக்கும் என்ன பிரச்சனை? தீர்வு என்ன? என்ற விஷயங்களை கதா பாத்திரங்களின் அற்புதமான உணர்ச்சிகளின் வழியே சொல்லியிரு க்கிறார் டைரக்டர். இரண்டு தனிப்பட்ட மனிதர்கள், இவர்கள் சந்திக்கும் மனிதர்கள் வழியே கதை நகர்கிறது.மிக எளிமையான உரையாடல்களும், வசன உச்சரிப்பும் படத்திற்கு கூடுதல் பலம். கருமேகங்கள் கூடி மழை வருமென்று எதிர் பார்த்திருப்போம். ஆனால் தீடீரென மேகங்கள் கலைந்து மழை வராமல் போய் விடும். அதே போல் அன்புக்கு ஏங்கி கிடைக்காமல் போய் விடும் உணர்வை சொல்லி உள்ளார் தங்கர்.

கருமேகங்கள் என்ற வார்த்தையை ஒரு குறியிடாக தந்துள்ளார் டைரக்டர். அந்திம காலத்தில் மகளின் அன்புக்கு ஏங்கும் முதியரும், பெறாத மகளின் அன்புக்கு ஏங்கும் இளைஞனும் என அன்பின் வெளிப்பாடக உள்ளது பல காட்சிகள்.

தகவல் தொழில் நுட்பத்தால் குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும் உறவு சிக்கல்களை முன் வைத்துள்ளார் தங்கர். தன் தவறுக்கு மன்னிப்பு கிடைக்குமா? தன் வீட்டில் தன்னை புரிந்து கொள்வார்களா என்ற அன்புக்கு ஏங்கும் முதியவர் நடிப்பில் நம் வீட்டு அப்பவை, தாத்தாவை நினைவு படுத்தி விடுகிறார் பாரதி ராஜா. யோகிபாபு தான் ஒரு சிறந்த குணாச்சித்திர நடிகர் என்பதை வரும் காட்சிகள் மூலம் உணர்த்துகிறார்.

அதிதி பாலன், கெளதம் மேனன், மருமகளாக நடிப்பவர் என அனைவருமே நடிப்பால் அசத்தி விடுகிறார்கள். ஜி. வி. பிரகாஷின் இசை தாலாட்டி செல்கிறது. ஏகாம்பரம் -தங்கரின் ஒளிப்பதிவில் லெனினின் படத்தொகுப்பு கைகோர்த்து படத்தை தரமான படமாக உயர்த்தி உள்ளது. கார்ப்பரேட் உலகில் குறைந்து வரும் பரஸ்பர அன்பின் முக்கியத்துவத்தை சொல்கிறது. கருமேகங்கள் கலைகின்றன. இது செய்த தவறின் வழியே அன்பை தேடும் பயணம்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT