வெள்ளித்திரை

தீபாவளி ரிலீஸ்: முதல்நாளே இணையத்தில் வெளியானது அண்ணாத்த படம்!

கல்கி

தீபாவளியை முன்னிட்டு நேற்று அண்ணாத்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. அதேசமயம் தீபாவளி ரிலீஸாக

நேற்றே தமிழ் ராக்கர்ஸ் உள்பட பல இணையதளங்களில் அண்ணாத்த படம் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

உலகெங்கும் ரஜினி ரசிகர்கள் அண்ணாத்த படத்தின் ரிலீஸுக்காக காத்திருந்தனர்..

நேற்று தீபாவளியை முன்னிட்டு அண்ணாத்த படம் வெளியானது. தமிழகமெங்கும் அதிகாலைக் காட்சிகள் திரையிடப்பட்டன. வெளிநாடுகளிலும் இந்த படம் வெளீயாகி வசூலைக் குவித்ததாக கூறப்படுகிறது. இந்த படம் பரதரப்பு விமரிசனங்களையும் பெற்று வருகிறது. வயதான ரசிகர்கள் இந்த படத்தை வரவேற்க, இளம் ரசிகர்கள் ''ஓவர் சென்டிமெண்ட்'' என கருத்தை முன்வைக்கிறார்கள்.

இந்நிலையில் தியேட்டர்களீல் அண்ணாத்த படம் வெளீயான கையோடு, நேற்று தமிழ்ராக்கர்ஸ், மூவிரூல்ஸ், டெலிகிராம் உள்ளிட்ட இணையதளங்களில் படம் திருட்டுத்தனமாக வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாத்த படத்தை வெளியிடுவதற்கு முன்பாக, இப்படத்தின் தயாரிப்பாளர்கள், படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிடுவதற்கு தடை கேட்டு நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். நீதிமன்றமும், அண்ணாத்த படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

முருகப்பெருமானின் அர்த்தமுள்ள திருநாமக் காரணங்கள்!

லெமன் கிராஸின் 11 ஆரோக்கிய நன்மைகள்!

கேன்சரை தடுக்கும் 7 வகை வெஜிடேரியன் உணவுகள் தெரியுமா?

வெப்பம் வாட்டி வதைக்குதா? இந்த தேங்காய்ப்பால் ஐஸ்கிரீம் ட்ரை பண்ணி பாருங்களேன்! 

வேதங்கள் வழிபட்ட சிவபெருமான் எங்கு வீற்றிருக்கிறார் தெரியுமா?

SCROLL FOR NEXT