nithya menon 
வெள்ளித்திரை

தமிழ் நடிகர் டார்ச்சர்.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை நித்யா மேனன்!

விஜி

மிழ் நடிகரால் தான் துன்புறுத்தப்பட்டதாக பரவிய தகவலை நடிகை நித்யான மேனன் மறுத்துள்ளார். இதுபோன்ற மோசமான நடத்தையை நிறுத்துங்கள் என இன்ஸ்டாகிராமில் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ், தெலுங்கு. மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றவர் நடிகை நித்யா மேனன். வெப்பம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தமிழில் இவர் நடித்த ஓ காதல் கண்மணி, மெர்சல், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது. தற்போது தெலுங்கில் அவரது நடிப்பில் ‘குமாரி ஸ்ரீமதி’ என்ற தொடர் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த தொடருக்கான புரொமோஷன் வேலைகளில் நித்யா மேனன் ஈடுபட்டுள்ளார். 

இந்நிலையல், சமீபத்தில் நித்யா மேனன் பேட்டி ஒன்றில் பேசியதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வேகமாக பரவி வந்தது. அதில், “நான் இதுவரை தெலுங்கு திரைத்துறையில் எந்தவிதமான பிரச்னைகளையும் சந்தித்ததில்லை. ஆனால் தமிழ் திரைத்துறையில் எனக்கு பல பிரச்னைகள் இருந்தன. ஒரு தமிழ் நடிகர் படப்பிடிப்பு தளத்தில் என்னை துன்புறுத்தினார் ” என்று கூறியதாக சிலர் வதந்திகளை பரப்பி வந்தனர்.

இந்த செய்தி வேகமாக பரவியதை அடுத்து, நித்யாமேனன் ரசிகர்கள், யார் அந்த நடிகர்? என்ற சந்தேகத்தை எழுப்ப ஆரம்பித்தனர். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் நித்யா மேனன், 'இது முற்றிலும் தவறான செய்தி. அப்படி நான் எந்த ஒரு நேர்காணலும் கொடுக்கவில்லை என பகிரங்கமாக விளக்கம் அளித்துள்ளார் . இந்த போலிச் செய்தியைப் பரப்பியது யார் என்று அடையாளம் காட்டுங்கள் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த தவறான செய்தியை வெளி உலகத்துக்கு எடுத்துச் சொன்னால் மட்டுமே வதந்தி பரப்புபவர்களின் மோசமான நடத்தையை தடுக்க முடியும் என்பதால் இதை சுட்டிக்காட்டுவதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

தொடர்ந்து யார் பரப்பினார்கள் என்பதை கண்டறிந்து அவர்களது ஐடியை பதிவிட்டு கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT