வெள்ளித்திரை

FALL (2022) - தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம்

எஸ்.ஏ.பி.கற்பகவல்லி

'அங்காடித்தெரு' அஞ்சலி நாயகியாக நடித்த 'ஃபால்' எனும் தமிழ் வெப் சீரிஸ் டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் வெளியாகி உள்ளது. மொத்தம் 7 எபிசோடுகள். ஒவ்வொன்றும் 30 நிமிடங்கள் ஆக மொத்தம் ஒரே சிட்டிங்கில் மூன்றரை மணி நேரத்தில் பார்க்கக்கூடிய ஒரு த்ரில்லர். இது 'வெர்ட்டிக்' எனும் கன்னட சீரிஸின் அஃபிசியல் ரீமேக்.

நாயகி திவ்யா நகரத்தில் மெயின் இடத்தில் ஒரு ஸ்போர்ட்ஸ் சென்டர் நடத்தி வருகிறார். இடம், பில்டிங்க் எல்லாம் அவர் பெயரில் தான் இருக்கிறது. அம்மா, அப்பா, அண்ணன், தங்கை என 5 பேர் கொண்ட குடும்பத்தில் நாயகிதான் பொறுப்பானவர். அதனால் வீட்டில் அவருக்குத்தான் செல்வாக்கு.

அந்த நகரம் மெட்ரோ சிட்டி ஆக டெவலப் ஆக உள்ளதாக அமைச்சர் மூலம் முன் கூட்டியே தெரிய வருகிறது. இதனால் ஸ்போர்ட்ஸ் சென்டர் இருக்கும் இடத்தின் விலை பல மடங்கு எகிற இருக்கிறது. இந்நிலையில் அந்த இடத்தை குறைவான விலைக்கு வாங்கி லாபம் பார்த்து விடலாம் என சிலர் நினைக்கிறார்கள்.

இப்படி இருக்கும்போது ஒரு நாள் நாயகி ஸ்போர்ட்ஸ் சென்டர் மாடியிலிருந்து கீழே விழுந்து கோமா நிலைக்கு சென்று விடுகிறார். அதற்குப் பின் என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக் கதை.

நாயகி திவ்யாவாக அஞ்சலி தெளிவான நடிப்பு. தனக்கு ஒரு காதலன் இருக்கும்போதே இன்னொரு இல்லீகல் அஃபேர் தனக்கு இருந்ததாக தன் தங்கை சொல்வதைக்கேட்டு அதிர்ச்சி அடைவது சிறப்பான நடிப்பு. தன்னை விட வயது குறைந்த அந்த கோச் யார் என்பது தெரிய வரும்போது அவர் முகத்தில் காட்டும் எக்ஸ்பிரஷன்ஸ் பிரமாதம். ஒரு டிடெக்டிவ் போல அவர் நகர்த்தும் மூவ்கள் கச்சிதம்.

நாயகியின் அண்ணியாக, தோழியாக சோனியா அகர்வால், எஸ்.பி.பி. சரண், சந்தோஷ் பிரதாப் என ஒவ்வொருவரின் மாறுபட்ட நடிப்பும் கவர்கிறது.

போலீஸ் ஆஃபீசருக்கும், அவருடன் ஜோடியாக வலம் வரும் லேடி எஸ் ஐ, இருவருக்குமிடையே ஓடும் லவ் டிராக் அழகு.

இயக்குநர் சித்தார்த் ராமசாமி, ஒவ்வொரு எபிசோடையும் விறுவிறுப்பாகக்கொண்டு போகிறார். கருந்தேள் ராஜேஸ் தான் திரைக்கதை. அஜேசின் இசையில் பிஜிஎம் த்ரில்லிங் மூடில் பயணிக்க வைக்கிறது.

நாயகியைத்தள்ளி விட்டது யார்? என்ற க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டோடு அந்த 19 வயது கோச் யார்? என்பதிலும் அதிர்ச்சி காத்திருக்கிறது. 'ஃபால்' விறுவிறுப்பான ஒரு த்ரில்லர் தான்.

கோடைக்காலத்திற்கு ஏற்ற பெண்களுக்கான ஹேர்கட் என்னென்ன தெரிஞ்சிக்கலாம் வாங்க!

ஊட்டியையே தூக்கி சாப்பிடும் குளிர்ந்த காற்று வீசும் ராமக்கல்மேடு போவோமா வாருங்கள்!

மனம் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறதா?

காற்றால் இயங்கும் லிஃப்ட்டுகள் அழகுக்கு அழகு, ஆற்றலுக்கு ஆற்றல்!

சாப்பிடுவதற்கும் சில விதிமுறைகள் உண்டு தெரியுமா?

SCROLL FOR NEXT