Fight club Movie
Fight club Movie 
வெள்ளித்திரை

வெறும் 4 நாட்களில் இவ்வளவு கோடி வசூலா? வெற்றியடைந்த ஃபைட் கிளப்!

விஜி

கடந்த வாரம் வெளியான ஃபைட் கிளப் படம் நல்ல லாபம் ஈட்டியுள்ளதால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

உறியடி விஜய்குமார் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் திரையில் ஓடிக்கொண்டிருக்கும் படம் தான் ஃபைட் கிளப் திரைப்படம். அப்பாஸ் ஏ.ரஹ்மத் எழுதி, இயக்கிய ஃபைட் கிளப் படத்தை ஆதித்யாவின் ரீல் குட் ஃபிலிம்ஸ் நிறுவனமும், இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜிஸ்குவாட் நிறுவனமும் இணைந்து படத்தை தயாரித்துள்ளது.

இந்த திரைப்படம் கடந்த 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில், மோனிஷா, கார்த்திகேயன் சந்தானம், ஷங்கர் தாஸ் உள்ளிட்ட பலர் படத்தில் நடித்துள்ளனர். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார். வடசென்னை பின்புலத்தில் சண்டைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஃபைட் கிளப்பை இயக்குநர் எடுத்திருந்தார்.

இதன் கதை, திரைக்கதையை எழுத ஒரு வருடமும், படமாக்க ஒரு வருடமும், போஸ்ட் புரொடக்ஷன் முடித்து வெளியாக ஒரு வருடமும் என மூன்று வருடங்கள் பிடித்ததாக இயக்குநர் கூறியிருந்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. படத்தின் மேக்கிங் பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில், படம் வார விடுமுறை நாட்களில் ரூ.5.75 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.7 கோடி என கூறப்படுகிறது.

சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!

World Family Doctor Day: கொண்டாடப்பட வேண்டிய ஹீரோக்கள்! 

பெண்களே! உங்கள் முகத்திற்கு ஏற்ற பொட்டு எது?

5 Cool experiments for young science lovers!

உண்டியலின்றி உயர்ந்து நிற்கும் பாலாஜி!

SCROLL FOR NEXT