HBD SURYA 
வெள்ளித்திரை

HBD SURYA! நெருப்பு பாடல் + சூர்யா 44 - இரட்டை மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

நா.மதுசூதனன்

சூர்யா நடித்துக் கடைசியாக வெளிவந்த படம் எதற்கும் துணிந்தவன். பாண்டிராஜ் இயக்கத்தில் 2022 இல் வந்த இந்தப் படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. அதற்கு முன்னால் ஓ டி டியில் வந்து பெரிய வரவேற்பைப் பெற்றப் படம் சூரரைப் போற்று.

தற்போது ஒரு மிகப் பெரிய வெற்றியை எதிர்நோக்கியுள்ள சூர்யா நம்பிக்கையோடு இருக்கும் ஒரே படம் சிவா இயக்கத்தில் வர இருக்கும்
கங்குவா.
இந்தப் படத்தின் டீசர், வந்து பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது. படப்பிடிப்பு முடிவடைந்து விட்டாலும் இதைப் பற்றிய இந்தத் தகவலும் தராமல் வைத்திருந்தனர் படக்குழுவினர். இதைத் தவிர பத்து மொழிகளுக்கு மேல் வெளியாகும் படம், சூர்யா நடித்த படங்களிலேயே அதிகப் பொருட்செலவில் உருவாகும் படம் எனப் பல அடையாளங்களுடன் வெளியாக இருக்கிறது.

சமீபத்தில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியாக அக்டோபர் 10 என்று அறிவிக்கப்பட்ட போது  ஒரு பரபரப்பு கிளம்பியது. ஏனெனில் அன்று தான் சூப்பர் ஸ்டார் நடித்த வேட்டையன் படமும் வருவதாக ஒரு பேச்சு இருந்தது. ரஜினியோடு மோதுகிறார் சூர்யா என்று சலசலப்பு ஆரம்பித்தது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா "எந்தச் சூழ்நிலையிலும் ரஜினி சாருடன் போட்டி என்பதை நானும் விரும்பமாட்டேன். சூர்யாவும் விரும்பமாட்டார் வேட்டையன் வெளியாகும் தேதி இன்னும் முடிவாகவில்லை. அக்டோபர் 10 என்பது பல மொழிகளில் பெரிய படங்கள் எதுவும் வெளியாகாததால் தான் முடிவு செய்தோம். பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகும் படம் என்பதால் தான் அந்தத் தேதியே தவிர போட்டியெல்லாம் இல்லை" என்று பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்த நிலையில் சூர்யாவின் பிறந்த நாளான இன்று அந்தப் படத்தின் முதல் சிங்கிளான நெருப்பு வெளியானது. பாடலின்  உருவாக்கமும், விஷுவல்களும் ஈர்க்கும்படி இருக்கின்றன என்பது உண்மை. பெரிய ஆசுவாசம் என்னவென்றால் வார்த்தைகள் சற்றே புரியும்படி இருக்கிறது. கொஞ்சம் இரைச்சலாக இருந்தாலும் தொடர்ந்து கேட்கும்போது ஹிட்டாகும் வாய்ப்புகள் இருக்கிறது.

இதைத் தவிர கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா 44 படத்தின் ஒரு க்ளிம்ப்ஸ் விடியோவும் படக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.

கங்குவா கெட்டப்பிற்கு நேர்மாறாக அழகான அதே சமயம் ஒரு கேங்ஸ்டர் லுக்கில் வந்து சிகரெட் புகையை ஊதி, துப்பாக்கியால் சுடுகிறார் சூர்யா. ஷூட்டிங் நடக்கிறதாம். விரைவில் இந்தப் படத்தின் டைட்டில் லுக்கும் வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள். கார்த்திக் சுப்பராஜுக்கே உரிய அந்த மேற்கத்திய படங்களின் பின்னணி இசையுடன் வெளியாகியுள்ள இந்தக் கிளிம்ப்ஸும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அடுத்தடுத்து பல படங்களின் அப்டேட்டுகள் வெளியாகும் நிலையில் சோர்ந்து போயிருந்த சூர்யா ரசிகர்களுக்கு இன்று கிடைத்த இரட்டை மகிழ்ச்சியில் இந்த இரண்டு படங்களையும் வலைத்தளங்களில்  ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

இரண்டாண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் படங்கள்  என்பதால் இந்தப் படங்களுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. கங்குவா தனியாக வெளியானால் அந்தப் படத்தின் கண்டென்ட்டும் மக்களைக் கவர்ந்தால் ஒரு நல்ல வெற்றியை அவர் எதிர்பார்க்கலாம்.

ரஜினிகாந்தின் வேட்டையனும் அதே நாளில்  வந்து சேர்ந்தால் அப்போது இருக்கிறது வேட்டை.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT