The Actor 
வெள்ளித்திரை

14 மொழிகளில் நடித்த ஒரே தமிழ் காமெடி நடிகர் இவர்தான்!

பாரதி

ஹாலிவுட் உட்பட 14 மொழிகளில் நடித்த ஒரே தமிழ் காமெடி நடிகர் இவர்தான். யாரென்று பார்ப்போமா?

தமிழ் நடிகர்கள் பலர் தமிழைவிட்டு வேறு மொழிகளில் நடிக்க மறுத்துவிடுவர். அதற்கு ஒரு உதாரணம்தான் விஜயகாந்த். மேலும் சிலர் அதற்கு நேர்மாறாக வாய்ப்புக் கிடைக்கும் மொழிகளிலெல்லாம் நடிப்பர். ஆனால், அப்படி கிடைப்பது மிகவும் அரிது. கைவிட்டு எண்ணும் அளவிற்கே வேறு மொழிகளில் நடிக்கும் வாய்ப்பு சிலருக்கு கிடைக்கும். குறிப்பாக பாலிவுட் மற்றும் ஹாலிவுட்தான் வாய்ப்பு கிடைப்பது மிகவும் அரிது.

சமீபத்தில் தனுஷ் ஹாலிவுட்டில் களமிறங்கியது குறித்து தமிழக மக்கள் அனைவரும் பேசி அவரைப் பாராட்டினர். அதேபோல் தனுஷ் பாலிவுட்டிலும் நடித்திருக்கிறார். ஒரு ஹீரோ மற்ற மொழிகளில் நடிப்பதே அரிது என்ற நிலையில் ஒரு காமெடியன் அதுவும் அந்தக் காலத்திலேயே ஹாலிவுட் உட்பட 14 மொழிகளில் நடித்திருக்கிறார் என்றால் அது பெருமைக்குரிய விஷயம்தானே?

தனது ஒல்லியான உடலால் தமிழில் மிகவும் பிரபலமானவர் ஓமக்குச்சி நரசிம்மன். இவர் 1936ம் ஆண்டு பிறந்தார். சூரியன், இந்தியன், முதல்வன் போன்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் இவர். கவுண்டமணி, செந்தில், வடிவேலு என முன்னணி காமெடியன்கள் அனைவருடனும் நடித்த இவர், மக்களை சிரிக்க வைப்பதில் மிகவும் கவனமாக இருந்தார். தனது ஒல்லியான தோற்றத்தின் மூலமும் காமெடி மூலமும் தனக்கான இடத்தைப் பிடித்து மெம்மேலும் வளர்ந்தவர் ஓமக்குச்சி நரசிம்மன்.

இவரின் திறமையைக் கண்டு பல மொழிகளில் நடிக்க இவரை அழைத்தனர். அந்தவகையில் ஹாலிவுட்டில் இந்தியன் சம்மர் என்ற படத்தில் நடித்தார். இந்தப் படம் 1993ம் ஆண்டு வெளியானது. ஹாலிவுட்டில் நடித்த முதல் தமிழர் என்ற பெருமை இவரையே சாரும். இதனையடுத்து இவருக்கு பல மொழிகளில் நடிக்க வாய்ப்பு வந்துக்கொண்டே இருந்தது. ஆனால், இவருக்கு தமிழில் நடிக்கவே மிகவும் பிடித்ததால் தமிழில் நிறைய படங்களில் நடித்தார்.

தன் வாழ்நாளில் 1500க்கும் மேற்பட்ட படங்களில் 14 மொழிகளில் நடித்து சாதனைப் படைத்தவர் ஓமக்குச்சி நரசிம்மன்.

இவர் 2009ம் ஆண்டு உயிரிழந்தார். ஆனால், இவரின் சாதனையும் பெருமையும் மட்டும் இன்றளவும் பலருக்கும் தெரியவில்லை என்பதுதான் வருத்தத்திற்குரிய விஷயம்.

 

பிக்கி உண்டியலின் வரலாறு தெரியுமா?

வேகமாகச் சுழலும் இறந்த நியூட்ரான் நட்சத்திரத்தை கண்டறிந்த விஞ்ஞானிகள்! 

இன்சுலின் சுரப்பை இயற்கையாக சீராக்க உதவும் எளிய உணவுகள்!

உடலில் மருக்கள் இருந்தால் சாதாரணமாக நினைக்காதீங்க… ஜாக்கிரதை! 

கனக விநாயகர் கணக்கு விநாயகர் ஆன கதை தெரியுமா?

SCROLL FOR NEXT