Huma qureshi 
வெள்ளித்திரை

‘Animal‘ படத்தைப் பாராட்டிய 'வலிமை' பட நடிகை!

பாரதி

'வலிமை', 'காலா' போன்ற படங்களில் நடித்த பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி அனிமல் படத்தை ரசித்து பார்த்ததாகவும், அது போன்ற படங்களில் நடிக்க ஆசை உள்ளாதகவும் கூறியுள்ளார்.

'அர்ஜுன் ரெட்டி' படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய இந்த அனிமல் படத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் இந்திய அளவில் நல்ல வசூலை ஈட்டினாலும் பல எதிர்மறை கருத்துகளையும் குவித்து வருகின்றது. இது ஒரு ஆண் ஆதிக்கப் படம் என்று சிலர் கூறினாலும் சிலர் இப்படம் சொல்ல வரும் கருத்தைத் தெளிவாகப் புரிந்துக்கொண்டு, நல்ல கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

அதாவது இந்த படத்தில் ரன்பீரின் அப்பா மீதான அதீத அன்பும் அவருடன் நேரம் செலவழிக்க முடியாமல் தவிக்கும் ரன்பீரின் ஏக்கமும் மற்றும் கோர விபத்தினால் உடம்பில் ஏற்பட்ட சில வேதியல் மாற்றங்களுமே ஹீரோவின் கதாப்பாத்திரத்தை உருவாக்கியுள்ளது என்று கூறுகின்றனர். இதில் வேண்டுமென்றே ஆணாதிக்க சிந்தனையை தினிக்கவில்லை என்று பலரும் நேர்மறையான கருத்துகளைத் தெரிவிக்கின்றனர். அதேபோல் இப்படத்தை ஒரு படமாக மட்டுமே பாருங்கள் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி இதுகுறித்து பேசுகையில், “அனிமல் படத்தை நான் மிகவும் ரசித்தேன். மிகவும் பிடித்திருந்தது. இப்படத்தின் ஆண் மையப் பார்வை, ஆக்ஷன் மற்றும் இசை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சினிமா துறையில் எல்லா வகையான படங்களும் எடுக்க வேண்டும். அந்த படங்களை எப்படி பார்க்க வேண்டும் என்பது பார்ப்பவர்களின் விருப்பமே.அனிமல் படத்தில் வருவது போல கையில் இயந்திர துப்பாக்கியை வைத்து சண்டையிடுவது போன்ற படங்களில் நடிக்க வேண்டுமென்ற ஆசை எனக்கும் உள்ளது. The wolf of wall street மற்றும் animal போன்ற படங்களில் நடிப்பது மிகுந்த உற்சாகமாக இருக்கும்” எனக் கூறினார்.

மேலும் இந்த பிரச்சனைக் குறித்து அவர் பேசுகையில், “அனிமல் பற்றிய விவாதம் எழுவது சமுதாயத்திற்கு அவசியமானதுதான். அதேபோல் பல நல்ல படங்கள் எடுத்தாலும் சமுதாயம் மாறாமல் இருப்பதும் கவனிக்க வேண்டிய விஷயமே. அனிமலோ அல்லது நான் நடித்த 'மஹாராணி' வெப் சீரிஸோ, மக்கள் வரவேற்பு அளிக்கும் வரை இவ்வகை படைப்புகள் வந்துக்கொண்டுத்தான் இருக்கும்.” இவ்வாறு அவர் கூறினார்.

சுவாமி ஐயப்பன் அரக்கி மகிஷியை வதம் செய்த வாள் எங்குள்ளது தெரியுமா?

தோரின் பிரபலமான 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்! 

சிறுதானிய உணவுகள் உடலில் ஏற்படுத்தும் ஆரோக்கிய மாற்றங்கள்!

கேட்ட வரத்தைக் கொடுக்கும் கார்த்திகை சோமவார விரதம்!

SIP திட்டத்தின் மாதத்தவனையை தவறவிட்டால் என்ன ஆகும் தெரியுமா? 

SCROLL FOR NEXT