" கருமேகங்கள் கலைகின்றன"படம் பார்த்து விட்டு உணர்ந்தேன் அழுதேன், இன்னும் கொஞ்சம் நேரம் அப்பாவுடன் நேரம் செலவழித்திருக்கலாமோ? என்ற ஏக்கம் வந்து விட்டது என படத்தொகுப்பாளர் ஆண்டனி கூறியுள்ளார்.
வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரித்து வரும் படம் , தங்கர் பச்சானின் "கருமேகங்கள் கலைகின்றன". பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன், யோகிபாபு ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்திருக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதுகிறார். ஒளிப்பதிவு என்.கே ஏகாம்பரமும், படத்தொகுப்பை பி.லெனினும் மேற்கொள்கின்றனர். படத்தினை டி. துரை வீரசக்தி தயாரிக்கிறார்.மண் சார்ந்த மென்மையான படைப்பாக வெளியான இப்படத்தின் first லுக் போஸ்டர் இணையம் முழுக்க பெரும் வரவேற்பை குவித்து வருகிறது.
தமிழ் திரையுலகில் வித்தியாசமான மற்றும் பாரம்பரியமிக்க வாழ்வியல் படைப்புகளால் எளிய மக்கள் மனங்களை வென்றவர் இயக்குநர் தங்கர் பச்சான். அவரது இயக்கத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு வரும் அழுத்தமான படைப்பாக "கருமேகங்கள் கலைகின்றன” திரைப்படம் உருவாகியுள்ளது.
படத்தொகுப்பாளர் ஆண்டனி பேசும்போது இந்த படத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. பார்த்து விட்டு வெளியே வந்தவுடன் இன்னும் சில காலம் என் பெற்றோருடன் நேரம் செலவழித்திருக்கலாம் என்று தோன்றியது. ஆனால், வாழ்க்கை, வேலை என்று வேகமாக சென்றுக் கொண்டிருக்கிறது. ஆகையால், நேரம் செலவழிக்க இயலவில்லை. கமர்சியல் படங்களைவிட இப்படம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. என் இதயத்தை தொட்டு விட்டது என்றார்.
இப்படம் குறித்து பாரதிராஜா, "தமிழ் திரை வரலாற்றில் மிக முக்கியமான படைப்பாக இருக்கும்" என்று கூறியது குறிப்பிடத்தக்கது.