பாலிவுட்டில் இதுவரைப் பார்க்காத அளவிற்கு ராமாயணப் படத்தை மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர். பல கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்தத் திரைப்படத்தை உருவாக்க ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்துவருகின்றனர். அந்தவகையில் ராமன் கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒரு தென்னிந்திய நடிகரைத்தான் முதலில் தேர்ந்தெடுத்தனர். ஆனால் அவர் ராவணன் கதாப்பாத்திரத்தில்தான் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.
சினிமாவில் ராமாயணம் கதைத் தொடர்பான பல சீரியல்களும் படங்களும் வந்துவிட்டன என்றாலும், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அந்த உலகத்தை அப்படியே கொண்டுவர வேண்டுமென்பதே பல இயக்குனர்களின் கனவாக உள்ளது. அந்தவகையில்தான் பிரபாஸ் நடித்த ஆதிப்புருஷ் படம் வெளியானது. ஆனால் அதில் தொழில்நுட்பம் மற்றும் லாஜிக் இல்லாத சில விஷயங்கள் படம் சொதப்பலாகக் காரணமாகின. அதேபோல் இப்படம் மதவாரியாகவும் சிலப் பிரச்சனைகளைக் கிளப்பிவிட்டது.
ராமாயணம் கதாப்பாத்திரம் என்றாலே அனைவரும் விரும்பும் கதாப்பாத்திரம் ராமன்தான். அந்தக் கதாப்பாத்திரத்தில் நடிக்கப் பலரும் போட்டிப் போட்டுக்கொண்டு வருவர். ஆனால் இவர் ராவணன்தான் உண்மையான ஹீரோ. சீதை தீக்குளிக்கும் போது சீதையின் கற்பு மட்டுமல்ல ராவணின் கற்பும்தானே வெட்டம் வெளிச்சமாகத் தெரிந்தது. ராவணன்தான் என்னைப் பொறுத்தவரை ரியல் ஹீரோ என்று கூறி, நடித்தால் அந்தக் கதாப்பாத்திரத்தில்தான் நடிப்பேன் என்றுக் கூறியுள்ளார். அதாவதுப் படத்தின் இயக்குனர் ராமனாக நடிக்க அந்தத் தென்னிந்திய நடிகர்தான் சிறந்தவர் என்று எண்ணி அவரிடம் கேட்டிருகிறார். அதற்கு அவர் இவ்வாறு பதலளித்துள்ளார்.
அது வேறு யாரும் இல்லை கேஜிஎஃப் யாஷ்தான். கேஜிஎஃப் படத்திற்குப் பிறகு யாஷ் யாருடைய படத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்புகள் கூடின. அந்தவகையில் இப்போது யாஷ் கீத்து மோகன்தாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக ராமாயணத்தில் ராமன் கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் கேட்டபோதுநான் ராவணனாகத்தான் நடிப்பேன் என்று கூறியுள்ளார். அதுதான் கெத்து என்றும் கூறியிருக்கிறார்.
அமீர்கான் படமான தங்கல் படத்தை இயக்கிய நிதீஷ் திவாரிதான் ராமாயணம் படத்தையும் இயக்கவுள்ளார். ஆயிரம் கோடி பட்ஜெட்டில் புதிய தொழில்நுட்பத்துடன் இயக்கவுள்ள இப்படத்தை மிகப்பெரிய பான் இந்தியா படமாக எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.
யாஷ் ராமனாக நடிக்கமாட்டேன் என்று கூறியதால் ரன்பீர் கபூர் ராமனாக நடிக்கவுள்ளார். அதேபோல் சீதாவாக சாய்பல்லவி நடிக்கவுள்ளார். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 17ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அதேபோல் அடுத்த ஆண்டுப் படத்தைத் திரையிட படக்குழுத் திட்டமிட்டுள்ளது.