வெள்ளித்திரை

"தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்": சாந்தனு பாக்யராஜ்!

ராகவ்குமார்

மத யானை கூட்டம் படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் இராவண கோட்டம் என்ற படத்தை இயக்குகிறார். ராமநாதபுர மாவட்ட பின்னணியில் நடக்கும் இந்த படத்தில் சாந்தனு, 'கயல்' ஆனந்தி, பிரபு நடிக்கிறார்கள். இந்த படத்தை கண்ணன் ரவி தயாரிக்கிறார்.

இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியிட்டு விழாவில் பேசிய சாந்தனு " இந்த படத்தின் தயாரிப்பாளர் கண்ணன் ரவி துபாயில் இருக்கிறார். நான் ஷூட்டிங்கில் இருக்கும் போது படத்தின் பட்ஜெட் செலவுகளையும் பார்த்துகொண்டேன். முப்பது நாட்களில் ஆக வேண்டிய செலவு பதினெட்டு நாட்களில் ஆகி இருந்தது. படத்தில் ஒரு மாடு வருகிறது. இந்த மாட்டை பார்க்க ஆயிரம், கொண்டு வர நான்கு ஆயிரம், கயிற்றில் கட்ட இத்தனை ஆயிரம் என கணக்கு காட்டி இருந்தார்கள். வர வேண்டிய ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் சரியான நேரத்திற்கு வர வில்லை. பணம் எதிர் பார்க்கிறார் என்று புரிந்தது. என்னால் பிரச்சனைகளை சமாளிக்க முடியவில்லை. தனியாக ஒரு வேனுக்குள் சென்று அழுவேன். ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைத்தேன். சீ இது தவறான முடிவு என்று என் எண்ணத்தை மாற்றி கொண்டேன்.

விக்ரம் சுகுமாரன் டைரக்ஷனில் ராவண கோட்டம் நல்ல படமாக வந்துள்ளது. நான் கேட்டு கொண்டதற்கு இணங்க நடிகர்கள் பலர் சம்பளத்தை குறைத்து கொண்டார்கள். இவர்களை போன்ற நல்லவர்களால் தான் இந்த முயற்சி சாத்தியம் ஆனது "என்று உணர்ச்சி பொங்க பேசினார்.

கண்களைக் கட்டிக்கொண்டு பெருமாளுக்கு கிரீடம் சாத்தும் கோயில் எது தெரியுமா?

ஊட்டச்சத்து நிறைந்த விதவித சப்பாத்திகளின் ஆரோக்கிய நன்மைகள்!

செல்வ செழிப்பு தரும் சில எளிய வாஸ்து குறிப்புகள்!

நேரம் எனும் நில்லாப் பயணி!

ஸ்வஸ்திக் வடிவ கிணறு பற்றி தெரியுமா உங்களுக்கு?

SCROLL FOR NEXT