வெள்ளித்திரை

#Thalapathy67 படத்தில் வில்லன் விஷாலா? செட்டில் சந்தித்த லோகேஷ் கனகராஜ்!?

மணிகண்டன்

லோகேஷ் கனகராஜ். இந்த பேரைக் கேட்டாலே கோலிவுட் வட்டாரம் குஷியாகிடும். அந்தளவுக்கு அவரோட படங்கள் ரசிகர்கள் மத்தியில வரவேற்பைப் பெற்று வருகின்றன.

அதுவும் கைதி, மாஸ்டர், விக்ரம்னு ஒவ்வொண்ணும் வேற லெவல்ல இருக்க, அடுத்ததா அவர் விஜய்யை வைத்து 'தளபதி67' படத்தை இயக்க தயாராகி வருகிறார்.

தற்சமயம் 'வாரிசு' திரைப்படத்தில் தளபதி விஜய், நடித்துக்கொண்டிருக்கும் சமயத்தில், அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார் என்ற செய்தியே விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் விஷாலை சந்தித்து 'தளபதி67' படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

தளபதி படம் என்றாலே மாஸான எதிர்பார்ப்பு இருக்கும். அதிலும் ஆக்ஷன் ஹீரோ விஷாலும் உடன் நடிக்கிறார் என்றால் சொல்லவா வேண்டும். இப்போதே ரசிகர்கள் மனதில் கற்பனை செய்து பார்த்து வருகின்றனர்.

விஷால் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் 'மார்க் ஆண்டனி' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் டைரக்டர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஷாலை சந்தித்துவிட்டு வந்ததாகவும், அந்த சந்திப்பு 'தளபதி 67' படத்தில் விஷாலை வில்லனாக நடிக்க கேட்டதாவும் கூறப்படுகிறது. இது சம்பந்தமான வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் நடிப்பதற்காக மலையாள நடிகர் நிவின் பாலியிடமும் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது.

உண்மை என்னவென்று அதிகாரப்பூர்வ தகவல் வெளிவராத நிலையில், இப்பொழுது வைரலாகிவரும் இந்த செய்தி ஒருவேளை உண்மையாக இருக்கும்பட்சத்தில், ரசிகர்கள் மத்தியில இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Do you know about Kepler 452B?

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வந்து உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தும் பத்திரிகை!

தண்ணீர் பாட்டில் என்றாலே பிளாஸ்டிக் மட்டுமேதானா? மாற்றுவகைகள் உண்டா?

ஒன்பது வாசல் கடந்து மூலவரை தரிசிக்கும் கோயில் எங்குள்ளது தெரியுமா?

சூரியகாந்தி விதையின் வியக்க வைக்கும் மருத்துவப் பலன்கள்!

SCROLL FOR NEXT