வெள்ளித்திரை

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் மகளின் திருமண நிச்சயதார்த்தம்: மணமகன் ஆடியோ என்ஜினியர்!

கல்கி

இந்தியாவிலிருந்து இரு ஆஸ்கார் விருதுகள் வாங்கியவர் இசைப்புயல் .ஆர்.ரகுமான். இவருக்கு கதீஜா, ரஹீமா என்ற மகள்களும் அமீன் என்கிற மகனும் உண்டு. இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் மூத்த மகள் காதீஜாவுக்கு சில நாட்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

இதுகுறித்து கதிஜா ரகுமான் தன் இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டதாவது:

எல்லாம் வல்ல இறை அருளுடன் டியாசுதீன் ஷேக் முகமது அவர்களுடன் நடந்த எனது திருமண நிச்சயதார்த்தத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ரியாசுதீன் ஒரு ஆடியோ என்ஜினியர். எங்கள்

திருமண நிச்சயதார்த்தம் என்னுடைய பிறந்த நாளான, டிசம்பர் 29-ம் தேதி நடந்தது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர்.

இவ்வாறு கதீஜா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் .ஆர்.ரகுமான் இசையில், ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில், கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி, அத்ரங்கி ரே திரைப்படம் வெளியானது. மேலும் இந்த படம் தமிழில் கல்யாண கலாட்டா என்கிற பெயரில் வெளியானது. இந்த படத்தில் தனுஷ், சாரா அலிகான், அக்ஷய் குமார் நடித்துள்ளனர்.

அடுத்ததாக நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபனின் இயக்கத்தில் உருவாகும் இரவின் நிழல் படத்துக்கும், சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கும் 'வெந்து தணிந்தது' காடு திரைப்படத்துக்கும் .ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களின் நன்மை, தீமைகள் தெரியுமா உங்களுக்கு?

உலகிலேயே மிகச்சிறிய நுழைவாயில் கொண்ட அதிசய சிவன் கோயில்!

உறையும் அதிசய நீர்வீழ்ச்சி இந்தியாவில் எங்குள்ளது தெரியுமா?

Vasuki Indicus: 47 மில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்த உலகின் மிகப்பெரிய பாம்பு!

தன்னம்பிக்கை வளர நாம் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT