வெள்ளித்திரை

ஜெயம் ரவி படத்தில் 400 சம்பளத்தில் நடித்தேன்.. பழைய நினைவுகளை பகிர்ந்த விஜய் சேதுபதி!

ராகவ்குமார்

அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகி உள்ள இறைவன் திரைப்படம்  வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி  திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இப்படத்தின் முன்னோட்ட நிகழ்வு நேற்று நடை பெற்றுது இந்த நிகழ்வில் பேசிய  விஜய்சேதுபதி, "அகமது சார் மிகவும் தன்மையானவர். அவரிடம் இருந்து இப்படி ஒரு படம் எதிர்பார்க்கவில்லை. படத்தின் டைட்டில்கள் அழகாக வைக்கிறார். இறைவன் என்பது நம்பிக்கையான வார்த்தை. ஆனால், அதை இப்படி பயமுறுத்தி ஆர்வத்தோடு கொடுத்துள்ளார்கள். படத்தின் டிரெய்லர் பயமுறுத்தினாலும் பார்ப்பதற்கான ஆர்வத்தைக் கொடுத்துள்ளது. நான் சினிமாவில் வாய்ப்பு தேடிய காலத்தில் நான் பார்த்த முதல் ஹீரோ ஜெயம் ரவிதான். 'எம். குமரன்' படத்தில் நதியா மேம் ரவிக்கு அறிமுகம் கொடுக்கும் போது நானும் அங்கு நின்றிருப்பேன். அந்தப் படத்தில் எனக்கு 400 ரூபாய் சம்பளம் கொடுத்திருப்பார்கள். 'இறைவன்' படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்". என்று பழைய விஷயங்களை நினைவு கூர்ந்தார்    

 "இறைவன் என்றாலே அன்புதான். எதுக்கு இந்தப் பெயர் வைத்தீர்கள் என என்னிடம் நிறைய பேர் கேட்டார்கள். இந்தத் தலைப்பை இயக்குநர் சொன்ன போது, 'இன்னுமா யாரும் இந்த தலைப்பை வைக்கவில்லை?' என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அன்பை கொடுக்கும் இறைவனை ஏன் தலைப்பாக வைக்கவில்லை என்று தோன்றியது. இந்த அன்பில்தான் படம் தொடங்கியது. கோவிட் காரணமாக 'ஜனகனமண' படம் நின்றது. அதன் பின்புதான் 'இறைவன்' தொடங்கியது.

நான் பார்த்த முதல் நடிகன் ரவிதான் என விஜய் சேதுபதி சொன்னார். ஆனால், நான் இயக்க வேண்டும் என நினைத்த முதல் ஹீரோ விஜய்சேதுபதிதான். சீக்கிரம் எனக்கு கால்ஷீட் கொடுங்கள்.  அகமது சாரின் அன்பும் நட்பும் எனக்கு எப்போதும் தேவை. படத்தில் விஜயலட்சுமி, நரேன் சிறப்பாக நடித்துள்ளனர். அப்பாதான் நான் உருவான இடம். நிறைய கற்றுக் கொடுத்துள்ளார். தயாரிப்பாளர் சுதன் எங்களுக்கு சிறப்பாக பல அம்சங்களை  செய்துள்ளார்.

பொன்னியின் செல்வன் முடித்து விட்டு என்ன செய்ய போகிறாய் என்று என் அண்ணன் கேட்டார். ஏன் 'தனி ஒருவன்2' பண்ண மாட்டாயா எனக் கேட்டேன். அப்படி ஒரு அண்ணன் இருக்கும் போது எல்லாமே எனக்கு ஜெயம்தான். 'இறைவன்' படம் எல்லாருக்கும் பிடிக்கும். நான் இந்தப் படத்தில் நன்றாக நடித்திருக்கிறேன் என்றால் யுவனும் அதற்குக் காரணம். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள் " என்கிறார் ஜெயம் ரவி 

பிக்மேலியன் விளைவால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா?

குழந்தைகளின் தனித்திறமையை வளர்த்தெடுப்பது எப்படி?

துடுப்பற்ற படகு பயணம் போலாகும் இலக்கற்ற வாழ்க்கை!

எப்படி வாழ்ந்தோம் என்று இருக்க வேண்டும் வாழ்க்கை!

இந்திய மசாலா பொருட்களுக்கு நேபாளத்தில் தடை!

SCROLL FOR NEXT