Jovika vijaykumar
Jovika vijaykumar 
வெள்ளித்திரை

பிக் பாஸை விட்டு வெளியேவந்த ஜோவிகாவுக்கு அடித்த ஜாக்பாட்!

விஜி

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ள ஜோவிகா விஜயக்குமார் பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் 7வது சீசன் 60 நாட்களை கடந்து ஓடி கொண்டிருக்கும் நிலையில், வனிதா விஜயக்குமாரின் மகளான ஜோவிகா விஜயக்குமார் கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டார். பலராலும் தனித்துவமானவர் என்று பெயர் பெற்ற ஜோவிகா கடந்த சில நாட்களாகவே விளையாட்டில் கவனம் செலுத்தாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் தான் கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டார்.

பிக் பாஸில் இருந்து வெளியே வந்த பல போட்டியாளர்கள் தற்போது சினிமா துறையில் சாதித்து வருகின்றனர். அப்படிதான் பிரதீப் ஆண்டனியும் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டாலும் மக்களால் நற்பெயர் பெற்றதால் தற்போது படம் எழுத தொடங்கியுள்ளார். நிறைய தயாரிப்பாளர்கள் தன்னை அழைப்பதாகவும் பதிவிட்டிருந்தார்.

அந்த வகையில், ஜோவிகாவிற்கு ஒரு பட வாய்ப்பு வந்துள்ளது. அதாவது நடிகரும், இயக்குனருமான பார்த்திபனின் அடுத்த படத்தில் இணைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பார்த்திபன் அடுத்து இயக்கும் படத்தில் அவருக்கு உதவி இயக்குனராக ஜோவிகா பணியாற்றுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை வனிதா விஜயக்குமார் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதில், ஜோவிகா தன் அடுத்த கட்ட நகர்வுக்கு செல்கிறார் என பார்த்திபனுடன் ஜோவிகா பேசும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

நீங்க சீக்கிரமா உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்றீங்களா? ப்ளீஸ், இது மட்டும் வேண்டாமே! 

காகத்திற்கு உணவு வைப்பதன் அவசியம் என்னவென்று தெரியுமா?

அமிதிஸ்ட் கற்களைப் பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

கண்களைக் கட்டிக்கொண்டு பெருமாளுக்கு கிரீடம் சாத்தும் கோயில் எது தெரியுமா?

ஊட்டச்சத்து நிறைந்த விதவித சப்பாத்திகளின் ஆரோக்கிய நன்மைகள்!

SCROLL FOR NEXT