வெள்ளித்திரை

தனுஷ் நடிக்கும் ‘தி கிரே மேன்’ ஹாலிவுட் திரைப்படம்: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

கல்கி

நடிகர் தனுஷ் தான் நடித்துள்ள 'தி கிரே மேன்' ஹாலிவுட் திரைப்படம் ஜூலை 22-ம் தேதி ஓடிடி-யில் வெளியாகவுள்ளதாக தெரிவித்து, அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஹாலிவுட்டில் 'அவெஞ்சர்ஸ்', 'கேப்டன் அமெரிக்கா' உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய ஆண்டனி ரூசோ, ஜோ ரூசோ சகோதரரகள் நடிகர் தனுஷை வைத்து 'தி கிரே மேன்' என்னும் திரைப்படத்தை எடுத்து வருகிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக தனுஷ்  அமெரிக்கா சென்று தங்கியிருந்தார். இந்நிலையில் அந்தப் படத்தின் இறுதிகட்ட பணிகள்  நடந்து வருகிறது. இந்தப் படத்தில் தனுஷுடன், ரையான் காஸ்லிங், கிறிஸ் இவான்ஸ், அனா டி அர்மாஸ், ஜெசிக்கா ஹென்விக் ஆகிய பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தை பிரபல .டி.டி. தளமான நெட்ஃபிளிக்ஸ், சுமார் 1500 கோடி பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இந்நிலையில் நெட்ஃபிளிக்ஸ் இந்தியா ட்விட்டர் பக்கத்தில், நடிகர் தனுஷின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை  வெளியிட்டுள்ளது. அதில்  'தி கிரே மேன்' படத்தில் நடிகர் தனுஷ், வேற மாறி வேற மாறி'' என்று பதிவிட்டுள்ளது

நடிகர் தனுஷூம் தன் டிவிட்டர் பக்கத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். மேலும் இத்திரைப்படம் ஜூலை 22-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் .டி.டி தளத்தில் வெளியாகிறது என தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனை நெட்ஃபிளிக்ஸ் ரீட்வீட் செய்துள்ளது

இந்தியாவில் கிரிப்டோகரன்சி சட்டப்படி குற்றமில்லை! ஆனால்... ஆபத்தானது!

'காளி மிர்ச்' மூலிகை விதையிலிருக்கும் 10 ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

காலிஸ்தான் பயங்கரவாதி கொலை வழக்கில் இந்தியர்கள் கைது!

“அல்லாவின் ஆண்டிற்குள் இந்தியா துண்டு துண்டாக உடையும்” – பாகிஸ்தான் முன்னாள் செனட்டர்!

வெயில் காலத்தில் எந்த வித வண்ணங்களில் உடை அணிந்தால் இதமாக இருக்கும் தெரியுமா?

SCROLL FOR NEXT