Gunaa 
வெள்ளித்திரை

"மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதர் காதல் அல்ல" ரீ ரிலீசாகும் குணா... எப்போது தெரியுமா?

விஜி

குணா படம் ரீ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளில் தமிழ் சினிமா அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. பெரிய ஸ்டார் படங்கள் மட்டுமின்றி, சிறிய பட்ஜெட் படங்களும் நல்ல வசூலைப் பெற்று சாதனைப் படைக்கின்றன. இந்நிலையில், தற்போது சினிமா உலகில் ரீ ரிலீஸ் என்ற புதிய நடைமுறை உருவெடுத்துள்ளது‌. அதாவது, ஏற்கனவே ரிலீஸான திரைப்படங்கள் தற்போது மீண்டும் திரையிடப்பட்டு வசூலைக் குவிப்பது தான் ரீ ரிலீஸ் நடைமுறை. ரசிகர்களும் இதற்கு நல்ல வரவேற்பை அளித்து வருவதால், தியேட்டர் உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதனால், ரீ-ரிலீஸ் படங்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

ஒவ்வொரு ஹீரோவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் பழைய படங்களை ரீ ரிலீஸ் செய்து கல்லா கட்டி வருகின்றனர். தியேட்டர் உரிமையாளர்கள். அப்படி கமல்ஹாசன் நடிப்பில் உருவான குணா திரைப்படத்தையும் ரீ ரிலீஸுக்காக கையில் எடுத்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் குணா குகையின் குழியில் விழுந்த ஒரு நபரின் உண்மை சம்பவம் மையமாக கொண்டிருந்தது. இந்த படத்தில் குணா படத்தின் பாடல்கள் இடம்பெற்று நண்பர்கள் பாடலாக மாறி அனைவரையும் மெய்சிலிர்க்க செய்தது. சமீபத்தில் கோடி கணக்கில் வசூல் செய்த படமாகவும் அது அமைந்தது. அதுவும் மலையாள மொழியில் தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்ற படமும் அதுவே ஆகும். இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் பலரும் குணா பழைய படத்தை தேட ஆரம்பித்தனர்.

சந்தான பாரதி இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளிவந்த படம் குணா. சுவாதி சித்ரா இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவான இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் உலகம் முழுவதும் வெளியிட்டது. 33 வருடங்கள் கடந்த பின்னரும் கமல்ஹாசன் ரசிகர்கள் மட்டுமின்றி தலைமுறை கடந்து இன்றைய இளம் தலைமுறை குணா படத்தையும், அதில் இடம்பெற்றுள்ள வசனங்களையும், பாடல்களையும் நினைவூட்டி கொண்டாடி வருகின்றனர்.

இளையராஜா இசையமைப்பில், பாலகுமாரன் வசனத்தில், வேணு ஒளிப்பதிவில் தயாரிக்கப்பட்ட குணா படத்தில் கமல்ஹாசன், ரோஷினி, ரேகா,ஜனகராஜ், அஜய்ரத்தினம், எஸ். வரலட்சுமி ,கிரீஷ் கர்னாட் , எஸ். பி. பாலசுப்பிரமணியம், சரத் சக்சேனா, காகா ராதாகிருஷ்ணன், பிரதீப் சக்தி, அனந்து ஆகியோர் நடித்துள்ளனர். வாலி எழுதிய பாடல்களை, கமல்ஹாசன், எஸ்.ஜானகி, இளையராஜா, யேசுதாஸ், ஆகியோர் பாடியுள்ளனர்.

தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத திரைப்படமாக இருந்து வரும் குணா திரைப்படம் டிஜிட்டல் வடிவத்தில், மெருகூட்டப்பட்டு கமல்ஹாசனின் ரசிகர்களின் நீண்ட நாள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ஜூன் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் மறுவெளியீடு செய்யப்படுகிறது. தமிழ் திரைப்பட ஆடியோ உலகில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக முண்ணணி நிறுவனமாக, திகழ்ந்து வந்த பிரமிட் ஆடியோ குரூப் குணா படத்தை உலகம் முழுவதும் வெளியிட உள்ளது.

இளம் வயதினருக்கு உடற்பயிற்சியின்போது ஹார்ட் அட்டாக் வர காரணம் என்ன?

முந்திரிப் பருப்பு உடலில் கொழுப்புச் சத்தை அதிகரிக்குமா?

ராஜமவுலியை தொடர்ந்து ஆஸ்கார் விருதை குறிவைத்து காய் நகர்த்தும் அமீர்கான்!

சீதையைத்தேடி ராமன் கால் பதித்த பூமியின் சொர்க்கம்!

விமர்சனம்: பராரி - ஜா'தீ'க்கு ஒரு சவுக்கடி!

SCROLL FOR NEXT