கோவாவில் ஒரு சிறுவனை சந்திக்கிறார் பிரான்சிஸ். அந்த சிறுவனை சந்திக்கும் போது சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு நடந்த விஷயங்கள் பிரான்சிஸ்க்கு நினைவு வருகிறது... ஆயிரம் வருடங்களுக்கு முன்பு கங்குவா என்ற போர் வீரனாக இருக்கிறார் பிரான்சிஸ். தனது நாட்டிற்கு துரோகம் செய்யும் ஒருவனுக்கு கொலை தண்டனை தருகிறார். கொலை செய்யபட்டவரின் மகன் கங்குவாவை பழி வாங்க எண்ணுகிறார். இதற்கிடையில் அருகிலுள்ள மற்றொரு நாட்டு மன்னர் கங்குவா சார்ந்ததுள்ள நாட்டின் மீது போர் தொடுக்கிறார். கங்குவா என்ன செய்தார் என்பதுதான் கங்குவாவின் கதை. புரிஞ்சுதா மக்களே?
2024,1027 என்ற இரு கால களங்களில் கதை செல்கிறது. இரண்டில் 1027 தான் சிறப்பாக இருக்கிறது. காரணம் கதை அல்ல. காட்சிக்கு காட்சி வரும் பிரம்மாண்டமும் சூர்யாவின் நடிப்பும்தான். கடினமாக உழைத்திருக்கிறார் மனிதர்.
இப்படத்தின் சண்டை பயிற்சியாளர் சுப்ரீம் சுந்தர், ஒளிப்பதிவாளர் வெற்றி பழனி சாமி, VFX ஹரி ஹர சுதன்மூவரையும் பாராட்டலாம். கதையையே எதிர் பார்க்காமல் கங்குவா பார்க்க போனால், ஒருவேளை அந்த பிரம்மாண்டம் உங்களுக்கு பிடிக்கலாம். ஆனால் பிரம்மாண்டம் மட்டுமே இருந்தால்...? அதோடு இரைச்சலும் சேர்ந்தால்? சோதனைதானே?