காந்தாரா
காந்தாரா  
வெள்ளித்திரை

ஆஸ்கார் விருதுக்கு காந்தாரா திரைப்படம் பரிந்துரை!

கல்கி டெஸ்க்

ஆமெரிக்காவில் 95-வது ஆஸ்கர் விருதுக்கான விழா 2023-ல் மார்ச் மாதம் நடைபெற உள்ள நிலையில், அதன் இறுதிச் சுற்றுக்கான பரிந்துரை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. 

சர்வதேச சினிமாத் துறையின் உயரிய விருதான ஆஸ்கர் விருது. ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த ஆஸ்கார் விருதின் பல பிரிவுகளில் போட்டியிட உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான திரைப்படங்கள் அனுப்பப் படும்.

சிறந்த வெளிநாட்டுப்படம் என்ற பிரிவில் பல்வேறு நாடுகள் தங்கள் திரைப்படங்களை போட்டிக்கு பரிந்துரைக்கும் நிலையில், இந்தியாவிலிருந்தும் ஒவ்வொரு வருடமும் ஒரு திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆஸ்கார் பரிந்துரைக்கு அனுப்பப் படும்.

இந்தியாவை பொறுத்தவரை ஆஸ்கர் விருதை தனி மனிதர்களாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், மற்றும் சவுண்ட் எஞ்சினியர் ரசூல் பூக்குட்டி ஆகியோர் பெற்றனர்.

கடந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ மற்றும் ‘ஜெய் பீம்’ ஆகிய திரைப்படங்கள் இறுதிவரை சென்று ஆஸ்கர் வாய்ப்பை நழுவவிட்டன. இந்நிலையில், 95-வது ஆஸ்கர் விருதுக்கான விழா அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இதில் போட்டியிட காந்தாரா திரைப்படம் இந்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டு அனுப்பப் பட்டுள்ளது.

காற்றின் மாசுபாடும் அதை தடுத்து நம்மைப் பாதுகாப்பதும்!

விலை மதிப்பற்ற முட்டை ஓடும், பயன்படுத்திய காபி தூளும்!

அற்புத சத்துமிக்க பாலக்கீரை கட்லெட் செய்யலாம் வாங்க!

மஞ்சள் காய்ச்சலின் அறிகுறிகளும் தடுப்பு முறைகளும்!

புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் உண்டா? அறிஞர் அண்ணா சொன்னது என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT