ரகுதாத்தா
ரகுதாத்தா 
வெள்ளித்திரை

" இந்தி தெரியாது போயா" மாஸாக வெளியானது ரகு தாத்தா டீசர்!

விஜி

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் ரகு தாத்தா படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கேஜிஎஃப், காந்தாரா உள்ளிட்ட படங்களை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் நேரடியாக தமிழில் முதன்முறையாக தயாரித்துள்ள படம் ரகு தாத்தா. பெரும் வரவேற்பை பெற்ற தி ஃபேமிலி மேன் வெப் தொடருக்கு கதை எழுதிய சுமன் குமார் எழுதி இயக்கியுள்ளார்.

இதில் நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார். ஒய் யாமினி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் இந்தி திணிப்பு விவகாரம் உருவெடுத்து வருகிறது. பலரும் இந்தி திணிப்புக்கு எதிராக ஆதரவு குரல் நீட்டி வருகின்றனர். இதனால் சில நாட்கள் இந்தி தெரியாது போடா என்ற ஹேஷ் டேக்குகளும் வைரலாகி வந்தன. இந்த நிலையில் இந்த படமும் இதனை மையமாக வைத்தே எடுக்கப்பட்டுள்ளது.

பள்ளியில் என்சிசி மாணவர்களிடம் இந்தியில் சொல்லப்படும் வார்த்தையை புரிந்துகொண்டு பலரும் அதன்படி செயல்பட, கீர்த்தி சுரேஷ் மட்டும் தமிழ்ல சொல்லுங்க சார் என உறுதியாக நிற்கிறார். அடுத்தடுத்த காட்சிகளில் இந்தி திணிப்பு வலுவாக எதிர்க்கப்படுகிறது. இந்த டீசரில் இடம்பெற்றுள்ள வசனங்கள் கவனம் பெற்றுள்ள நிலையில் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பப்பாளி இலையில் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா?

மாமிச உண்ணிகளின் வயிற்றை விட, தாவர உண்ணிகளின் வயிறு பெரிதாக இருப்பது ஏன் தெரியுமா? 

முத்து முத்தாக வியர்வை துளிர்க்கும் சிக்கல் சிங்காரவேலர் கோயில் அதிசயம்!

தந்தத்துக்கு நிகரான கொம்புகளைக் கொண்ட காண்டாமிருகங்கள்!

ஒரு நபரை முதல்முறை சந்திக்கப் போகும்போது பின்பற்ற வேண்டிய விஷயங்கள்!

SCROLL FOR NEXT