Comedy Actor Bala 
வெள்ளித்திரை

KPY பாலாவுக்கு என்னாச்சு? அவரே போட்ட பதிவு.. ரசிகர்கள் ஷாக்!

விஜி

லக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் பாலா விரல் உடைந்ததாக போடப்பட்ட பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

புதுவை மாநிலம் காரைக்காலில் பிறந்த பாலா, தன்னுடைய காமெடி திறமையை விஜய் டிவியில் ஒளிபரப்பான KPY நிகழ்ச்சில் வெளிப்படுத்தினார். கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான 'கலக்கப்போவது யாரு' சீசன் 6 நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற இவர், இதைத் தொடர்ந்து விஜய் டிவி புராபர்ட்டியாக மாறி... பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றாலும் இவருக்கு திரையுலக வாய்ப்பை பெற்று கொடுத்தது, குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். 

இந்த நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெல்லாம் ஃபேமஸானார். இதனால் நிறைய சம்பாதிக்கவும் ஆரம்பித்தார். சம்பாதித்ததை தனக்கென்று வாழாமல் ஏழை மக்களுக்கு பல உதவிகளை செய்து வந்தார். நிறைய பழங்குடி கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் உதவிகளை செய்து வந்தார். இதன் மூலம் இவர் ஆம்புலன்ஸ் பாலா என்று கூட அறியப்பட்டார். அந்த அளவிற்கு பல மக்களுக்கு ஆம்புலன்ஸ் இலவசமாக வழங்கினார். 

சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக சென்று வீடு வீடாக ரூ.1000 மற்றும் தேவையான பொருட்களையும் வாங்கி கொடுத்தார். இதனால் பலரும் இவருக்கு நன்றி தெரிவித்திருந்தனர். இவர் உதவி செய்த வீடியோகாட்சிகள் இணையத்தில் தீயாய் பரவ, ரசிகர்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் பாலா தன்னுடைய கைவிரல்கள் உடைந்து விட்டதாக instagram பக்கத்தில் போட்டுள்ள பதிவு, இவருடைய ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பலர் என்ன ஆச்சு என தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். பாலா விரலில் கட்டுடன் போட்டுள்ள பதிவில் 'மனம் நிறைந்தது... விரல் உடைந்தது! நன்றி என கூறியுள்ளார்.

இதை வைத்து பார்க்கையில், மக்களுக்கு உதவி செய்யும் போது எதிர்பாராத விதமாக இவருடைய விரல் உடைத்திருக்கலாம் என தெரிகிறது.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT