குய்கோ 
வெள்ளித்திரை

விமர்சனம் குய்கோ!

ராகவ்குமார்

AST  பிலிம்ஸ்  தயாரிப்பில் அருள் செழியன் இயக்கி உள்ள படம் குய்கோ. குய்கோ என்றால் குடியிருந்த  கோவில் என்று பொருள். தாயை குறிப்பிடும் குடியிருந்த கோவில் என்ற தலைப்பை வைத்தால் டைட்டில் பிரச்சனை வரும் என்பதற்காக  சுருக்கி குய்கோ என்று வைத்திருக்கிறார்கள்.

காவல் துறையின் அலட்சியத்தால் பாதிக்கப்படும் ஒரு இளைஞன் மற்றும் வளைகுடா நாட்டில் இருந்து திரும்பி வரும் மற்றொரு இளைஞன் செய்யும் அலப்பறைகள் என இருவரை சுற்றி கதை நகர்கிறது. இரண்டு வெவ்வேறு பிரச்சனைகளை தனித்தனியாக காட்சிப்படுத்தாமல், இரண்டையும் ஒரே  புள்ளியில் செல்வது போல்  காட்டியுள்ளார் இயக்குநர்.

விதார்த், யோகிபாபு, ஸ்ரீ பிரியங்கா, இளவரசு தவிர மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் மண் சார்ந்த மனிதர்களை நடிக்க வைத்துள்ளார் டைரக்டர். ஒரு சிறு பட்ஜெட் படத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் வாழ்வியலை எளிய மனிதர்களின் வழியே சொல்லி இருக்கிறார் அருள் செழியன்.                           

யோகிபாபு சிரிப்பை வர வைய்பதை விட யோசிக்க வைக்கிறார். வித்தார்த் ஒரு  கிராமத்தின் கல்வியின் தேவையை நடிப்பில் புரிய வைக்கிறார். பெண் கல்வியின் முக்கியத்துவதை பிரச்சாரமாக இல்லாமல் யதார்த்தமாக சொல்கிறது  இப்படம். பாடகர் அந்தோணி தாசனின்     இசையில் சிவப்பழகி பாடல் ஆட்டம் போட வைக்கிறது.       

லஞ்சம் வாங்குவது தனது பிறப்புரிமை போலவும், கேள்வி கேட்டால் சட்டத்தை வைத்து பயமுறுத்துவது என நாம்  வாழ்கையில் பார்க்கும் சில காவல் துறையினரை நினைவு படுத்துகிறார்கள் படத்தில் வரும் காவல் ஆய்வாளரும், ஏட்டையாவும்.                                                 

வன்முறை இல்லாமல், இரட்டை அர்த்த வசனம் இல்லாமல் சிறு பட்ஜெட்டில்  ஒரு நல்ல வாழ்வியலை சொல்லும் படமாக வந்துள்ளது குய்கோ. இந்த படம் பார்க்கும் போது நம் வாழ்வில் பார்த்த, பார்த்துக்கொண்டிருக்கும் யதார்த்த மனிதர்கள் நினைவுக்கு வரலாம்.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT