மலேசியா வாசுதேவன் அவர்களின் இறுதி காலத்தைக் குறித்து அவருடைய மகள் வெளிப்படையாக பேசியிருக்கிறார். இதைப்பற்றிப் பார்ப்போம்.
மலேசியாவில் பிறந்த வாசுதேவன் இளையராஜாவிற்கு மிகவும் பிடித்தமானவர். அவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் 8,000 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடினார். ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்களுக்கு பாடல் பாடித் தந்தவர். அவர் தனது தனித்துவமான குரலுக்காகவே மிகவும் பிரபலமடைந்தார். 1970 களில் 1990 களில் உச்சத்தில் இருந்த இவர் உடல்நலக்குறைவால் காலமானார்.
இவருடைய கடைசி காலத்தைக் குறித்து பேசியுள்ளார் இவரது மகள் ப்ரியதர்ஷினி.
அதாவது, “அப்பாவிற்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டு, கோமாநிலைக்குச் செல்வதற்கு முன்னதாக சிறிது காலம் சுயநினைவோடு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுக்கொண்டிருந்தார். ஒருமுறை நாங்கள் எல்லோரும் அவரை சந்திக்க சென்றிருந்தோம். அப்போது, அவரால் பெரிதாக பேசமுடியவில்லை. எங்களைப் பார்த்தவுடன் அவரது கண்ணில் கண்ணீர் வந்தது. அவர் அழுவதைப் பார்த்த உடன் எங்களுக்கும் அழுகை வந்தது. ஆனால் நாங்கள் அதை அவரிடம் காட்டிக்கொள்ளவில்லை.
நாங்கள் அழுதால், அவர் மிகவும் வருத்தப்படுவார். இதனால் மேலும் உடல் நிலை பாதிக்கப்படும் என்று அஞ்சினோம். நாங்கள் மீண்டு வந்துவிடுவீர்கள் என்று கூறிக்கொண்டே இருந்தோம். ஆனால், எங்களுடைய துரதிஷ்டம் அவர் அதன் பின்னர் வரவே இல்லை.
ஆனால், அவரது உயிர் மட்டும் இருந்து கொண்டிருந்தது. அந்த உயிர் ராஜா சார் வருவதற்காக காத்துக்கொண்டிருந்தது என்று நினைக்கிறேன். அப்பா உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்டு ராஜா சார் மருத்துவமனைக்கு வந்தார். அப்பா இருந்த ரூமின் கதவை திறந்து அவர் உள்ளே வந்த உடன், அவரது உயிர் சென்றது.” என்று பேசினார்.
மலேசியா வாசுதேவன் மற்றும் இளையராஜா இருவரும் நெருக்கமானவர்களாக இருந்தனர். ஆகையால், தனது இறுதி காலத்திலும் இளையராஜாவை எதிர்பார்த்துதான் அந்த உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது போல். அவர் வந்தப் பிறகே அவரைப் பார்த்ததும் மலேசியா வாசுதேவன் உயிரிழந்தார்.